பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஎ. உவர்க்கண்ணுர்ப் புல்லங்கீரனுர் -

உவர்க் கண்ணுார் எனும் ஊரிற் பிறந்த புல்லன் அல்லது புலவன் என்பாரின் மகளுர் : கீரனர் எனும் பெயருடையார் என்பதல்லது இவர் வரலாறு குறித்துப் .பிற எதையும் உரைத்தற்கில்லே. இவர் பிறந்த உவர்க் கண்ணுரர் யாண்டுளது என்பது குறித்தும் ஏதும் தெரிக் திலது. இவர் பாடிய மருதத்திணேப் பாட்டொன்று மணி மிடை பவளத்துள் வந்துளது. -

வலிமிக்க திண்மையும், தலைமையும்கொண்ட எரு மைக் கடாக்கள், மலர் பல மலர்ந்து தோன்றும் பொய்கை களில் பகலெல்லாம் படிந்திருந்து, மடமையும் மாண்பும் கொண்ட நாகுகளோடு நடந்துசென்று தோட்டங்களில் மேய்ந்துவிட்டுக் கடைசியாக வயல்களில் வந்து தங்கும் வளத்தாற் சிறந்தன. தமிழ்நாட்டு ஊர்கள்; அவ்வூர்களில் வாழும் மக்கள், மணி ஒலிக்கும் மாண்வினைத் தேரேறிச் செல்லும் செல்வ வாழ்வுடையர் : அந் நாட்டு மகளிர் ஒள்ளிய இழைபல அணிந்தவர்; ஆயினும், மகிழ்தற்குரிய மணுளரைப் பிரிந்து வாழுங்கால், தம் தாய் ஒம்பி வளர்த்த தம் உடல் அழகையும் விரும்பா மனங்லம் உடையவர், என்றெல்லாம் கூறும் புலவர் பாடலால் பழந்தமிழ் நாட் டின் பண்பு நன்கு விளங்குதல் காண்க. - - - -

"வலிமிகு முன்பின் அண்ணல் எளறு,

பனிமலர்ப் பொய்கைப் பகல்செல மறுகி, மடக்கண் எருமை மாண்காகு தழtஇப் படப்பை கண்ணிப் பழனத்து அல்கும் கலிமகிழ் ஊரன் ஒலிமணி நெடுந்தேர் ஒள்ளிழை மகளிர்சேரி.................... - தாய்ஓம்பு ஆய்நலம் வேண்டா தோளே." - .

- - , . " - r - (அகம் : கசக)