பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 மாநகர்ப் புலவர்கள் .

அவன் அளித்த யானைகளின் எண்ணிக்கையோடு ஒருவாறு ஒத்துநிற்கும் என்றும் பாராட்டி மகிழ்ந்துளார்.

'ஆஅய் அண்டிரன் அடுபோர் அண்ணல், இரவலர்க் கீத்த யானையிற், கரவின்று வானம் மீன்பல பூப்பின் ஆனது; ஒருவழிக் கருவழி யின்றிப் பெருவெள்ளென்னிற் பிழையாது மன்னே."

(புறம் : க2க)

ஆயின் யானைக் கொடையினைச் சிறப்பித்துப் பாடிய புலவர், அவன் பாணர் முதலாயினரைத் தன்னின் வேறாகக் கருதானாய்த், தன் பொருளெல்லாம் அவர் பொருளே எனக் கருதும் இனிய உள்ளமுடையனும் பண்பினைப் பாணர் பொருநர், கூத்தர் முதலாயினரை, அவன் யானை, குதிரை, தேர் ஆய இவற்றையேயன்றி, அவன் பொருள் எதையாயினும், தம்முடையது என்று வளைத்துக்கொள் வாராயின், அவன் அப்பொருளே எமது எனக் கவர்ந்து கொள்வானல்லன்; அவர் வளைத்துக்கொண்டனவற்றை, அவர்க்கே அளித்து மகிழும் மாண்புடையவன் என்று பாராட்டியுள்ளார்: .

களிறு மன்றே, மாவு மன்றே,

ஒளிறுபடைப் புரவிய தேரு மன்றே பாணர் பாடுநர் பரிசிலர் ஆங்கவர் தமதுஎனத் தொடுக்குவ ராயின், எமதுஎனப் பற்றல் தேற்ருப் பயங்கெழு தாயம்." (புறம்:கட்டு), ஆயின் கொடைப்புகழை எத்துனேதான்் புகழினும், அவர் உள்ளம் அமைதியுற்றிலது ; உடனே அவன் கொடைச்சிறப்பினேயும், கொடாதே சேர்த்துவைக்கும். செல்வர்தம் சீரின்மையினேயும் ஒருங்கே கூறி அவன் இறப்ப உயர்ந்தான்தலக்கண்டு மகிழ விரும்பிற்றுப்புலவர் உள்ளம்; உண்டங்கினிய அறுசுவையோடுகூடிய உண் வினைப் பிறர்க்கும் அளித்து உண்ண எண்ணுகாய்த் தாமே

தனித்து உண்டு கொழுத்து உயர்ந்தோல் ட்யர்த்திச்