பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசு, எருமை வெளியனுர்

மைசூர் நாடும், அதன் தலைநகர் மைசூர் நகரும் பண்டைநாளில் முறையே எருமை நாடு எனவும், எருமை யூர் எனவும் பெயர்பெற்றிருந்தன. பாண்டியன் நெடுஞ் செழியளுேடு, தலையாலங்கானத்தே போரிட்டோருள் எருமையூரன் என்பவனும் ஒருவன்; அவனே, காரறி கறவின் எருமை யூரன்" என்றும், "வடுகர் பெருமகன் பேரிசை எருமை" என்றும் புகழும் நக்கீரர், அவன் காட்டில் ஒடுவது அயிரியாறு என்றும் கூறுவர். எருமைக் குரிய நாடு குடநாடு என்பர் மாமூலனர். அவ்வூரிற் பிறந்து வெளியன் என்ற இயற்பெயருடைமையால் கம் புலவர், எருமை வெளியனர் எனப்பட்டார் என்பர் சிலர்; சிலர், விரைவெளி என்பதேபோல், எருமைவெளி என்பதும் ஒர் ஊரின் பெயராம்; அவ்வூரினராதலின் இவர் எருமை வெளியனர் என்று அழைக்கப்பெற்ருர் என்ப. எருமை நாட்டிலேயே வெளியம் என்ருேர் ஊர் உண்டு; அதுவே இவர் ஊராதலும் கூடும். இவருக்குக் கடலர்ை என்ற புலமைகலம் சான்ற மகளுர் ஒருவர் உளர்.

'தம்பொருள் என்பதம் மக்கள்” என்றும், 'பெறு. மவற்றுள் யாமறிவ தில்லை,அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற" என்றும் கூறுபவாதலின், மக்கட்பேறுற்ருரைப் பெருஞ்செல்வர் எனக் கருதினர் பண்டையோர் என்பது பெற்ருேம்; அவர்காலப் புலவராய நம் எருமை வெளியனர், ஒரு பெண், தன் கணவனேக் குறிப்பிடுங்கால், புதல்வர்ப் பயந்த பெருஞ்செல்வன் என்று குறிப்பிட்டாள் எனப் பாடியுள்ளார். 'எம்மில் புல்லுளேக் குடுமிப் புதல்வன் தந்த செல்வன்" (புறம்: உஎங்). இவர் குதிரை மறம் பாடுவதில் வல்லராவர். -

மறக்குடி வந்தாைெருவன், அவ்வூர் என மறவ ரோடும் கூடிக் குதிரை ஊர்ந்து போர்க்குச் சென்றன்; உந்தபின் குதிரைகள் வரிசையாக ஊர்நோக்கி