பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எருண்ம வெளியனுர், 89.

வந்துகொண்டிருந்தன; நம் மறவன் மனேவி, தன் கணவன் ஊர்ந்துவரும் குதிரையின் வருகையினேக் கண்கொட்டாது நோக்கி கின்றுகொண்டுளாள். ஆனல் எல்லாக் குதிரையும் வருகின்றன ; அவன் குதிரைமட்டும் வந்திலது ; அவளுக்கு ஐயம் உண்டாயிற்று; அவன் குதிரை களத்தில் மாண்டு. விட்டதோ என எண்ணிள்ை ; உடனே ஆங்கு மாண்டி ருப்பின், அது வறிதே மாண்டிராது ; அதை எளிதில் அழிக்க எவர்க்கும் ஆகாது; பெரும்போர் ஆற்றிய பின் னரே அது அழிந்திருக்கும் என்ற உறுதி உண்டாயிற்று : அஃது ஆற்றிய அவ் அரும் போர்க்காட்சி அவள் அகக்கண் முன் தோன்றியது. உடனே, அவளுக்கு ஒர் அரிய காட்சி கட்புலயிைற்று; இருபெரும் ஆறுகள் ஒன்று கூடும் கூடலில் கிற்கும் ஒரு பெரிய மரம், அவ்வாற்றுப். பெருக் கினேப் பலகாலும் தாங்கித் தாங்கி இறுதியில் அடியற்று விழ்ந்துவிட்டது; இந்தக் காட்சி அவள் கண்முன் தோன் றியவுடனே, நம் தலைவன் ஊர்ந்து சென்ற குதிரையும் இவ்வாறு பெரும்படையால் பலகாலும் தாக்குதலுற்றே இறுதியில் மாண்டிருத்தல் கூடும் என்ற எண்ணம் உண் டாயிற்று அவன் வராமையால் தோன்றிய வருத்தத்திற் கிடையே இக்காட்சி ஒர் அமைதியினே உண்டாக்கிற்று. மறக்குடி மகளின் இங்கிலேயினைக்கண்ட புலவர் அழகிய ஒரு பாட்டால் பாடிப் பாராட்டுகிருர்:

'மாவா ராதே; மாவா ராதே;

எல்லார் மாவும் வந்தன; எம்மில் புல்உளைக் குடுமிப் புதல்வன் தந்த செல்வன் ஊரும் மாவா ராதே; இருபேர்யாற்ற ஒருபெருங் கூடல் விலங்கிடு பெருமரம் போல உலக்தன்று கொல்அவன் மலேர்த மாவே."

- . . (புறம் : உஎக) தோழியும், தலைமகளும் ஒருவரின் ஒருவர் வேறு அல்லர், உடலால் வேறுபட்டுத் தோன்றினும் உணர்வால் ஒருவரே என்று கூறுவர் பழந்தமிழ் ஆசிரியர். இந்த