பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக. வேம்பற்றுார்க் கண்ணன் கூத்தனுர்

வேம்பற்றுார் என்ற பெயருடைய ஊர்கள் சோழ காட்டிலுமுள்ளன. ஆயினும், பாண்டிநாட்டு வேம்பற்றுார், . கடைச்சங்க காலக் தொடங்கி இன்றுவரையும் நல்ல :புலவர்கள் பிறந்து சிறக்கும் ஊராக விளங்குதலின், கண்ணன் கூத்தனர் பிறந்த பேறுடைய ஊரும் அதுவே யாம் எனக் கொள்வர் ஆராய்ச்சியாளர். இவ் வேம்பற்றுார், மதுரைக்கு வடகிழக்கில், இரண்டு காதத்தில் வையை கதிக்கு வடக்கேயுளது. குலசேகர சதுர்வேதி மங்கலம் என்றும் இதற்குப் பெயருண்டு எனக் கல்வெட்டுக்களால் அறிகிருேம். இது, இப்போது வேம்பத்துார் என வழங்கு கிறது. வேம்பற்றுாரில் பிறந்த இவர், கூத்தாடும் தொழில் உடையவராவர்; இவர் இயற்பெயர் கண்ணன் என்பது.

தலேவன் வரைந்துகொள்ளாமையால் வருந்தும் தலே மகனின் நோய்க்காம் காரணத்தை அறிந்துகொள்ள மாட்டாத தாய், அந்நோய் முருகனுல் வந்தது எனக் கொண்டு வேலனே அழைத்து வெறியாட்டெடுக்கத் தொடங்கிய வழி, தோழி, அந் நோய்க்காம் காரணம் இது என உண்மை உரைப்பாளாய்த், தாயின் அறியாமையினே அபும், அவள் வேண்ட வந்த வேலனையும், அவர்கள் மேற் கொள்ளும் விழாவினையும் எள்ளி நகைக்கும் பகுதிகளேப் புலவர் நன்கு விளக்கியுள்ளார். தம் நோய்தீரப் பிற உயிர் களேக் கொல்லும் செயல் அறிவுடைமை யன்று என்பதை யும் குறிப்பாக உணர்த்தியுள்ளார்.

'முருகயர்ந்து வந்த முதுவாய் வேல !

சினவல் ஒம்புமதி ; வினவுவது உடையேன்; பல்வேறு உருவின், சில்லவிழ் மடையொடு சிறுமறி கொன்று, இவள் கறுதுதல் விே வணங்கின கொடுத்தி யாயின், அணங்கிய விண்டோய் மாமலைச் சிலம்பன் ஒண்டார் அகலமும் உண்ணுமோ பலியே."

(குறுங் : கூகe)