பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. கோட்டியூர் நல்லந்தையார்

நல்லன் தந்தையார் என்ற இரு சொற்கள் நல்லங்தை யார் என்ருகும் ஆதலின், இவர் நல்லன் என்பாரின் தந்தை. யாம் சிறப்புடையவராவர். பாண்டிகாட்டில் உள்ள திருக் கோட்டியூர் என்பதே இவர் பிறந்த ஊராம். நெய்தல் திணையைச் சிறப்பித்து இவர் பாடிய பாட்டொன்று இடம் பெற்றுளது.

தலைமகன் வரையாது நீட்டித்தலால் வருந்தும் தலைவி யின் துயரினத் தலைவன் அறியக்கூறி, வரைந்துகொள்ள வழிசெய்ய விரும்பிய தோழி, தலைவன் தம் வீட்டின் புறத்தே வந்திருப்பது அறிந்து, ஊரார் கூறும் பழிச் சொற் கேட்டு அஞ்சி இல்லைவிட்டு நீங்காது உறையும் தலை மகள், அன்புடைத் தாயைக் கண்டும் அஞ்சுகின்ருள் என்று கூற முன்வந்து, அதை இவ்வாறே வெளிப்படக் கூருது, வேறொரு பொருள் மேலேற்றி, உப்பங்கழியிடத்தே இரை தேடி வந்திருக்கும் பறவையின் குத்துக்குத் தப்பிப் பிழைத்தோடிய, இருமீன் திரை கொணர்ந்து இட்ட மணல் மேட்டில் வளர்ந்து, கடல்நீரில் தலைசாய்ந்து கிடக்கும். தாழையின் மலர்களேயும், அப் பறவை எனக் கருதி' அஞ்சும் என்று கூறினுள். இவ்வாறு மறைத்து மொழி கிளவியால் தம் மனத்துள்ளதை உரைக்கும் அவள் அறிவி னேப் புலப்படுத்தியுள்ளார் புலவர் : -

"கருங்கால் குருகின் கோள் உய்ந்து போகிய முடங்குபுற இறவின் மோவாய் ஏற்றை எறி திரை தொகுத்த எக்கர் நெடுங்கோட்டுத் துறு கடல் கலேய தோடுபொதி தாழை வண்டுபடு வான்போது வெரூஉம்." (கற் : உகக).