பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. செல்லுனர்க் கொற்றனுர்

செல்லூர், செல்லி எனவும் வழங்கப்பெறும் இது, கீழ்க்கடலைச் சார்ந்துள்ளதொரு பேரூர் ; இது கோசர்க் குரிய கியம்த்திற்கு அணித்தே உளது : அருந்திறற் கடவுள ராற் காக்கப்பெறும் சிறப்புடையது . ஆதன் எழினி என்பானுக்கு உரியது மழுவாள் நெடியோயை பரசு ராமன் வேள்வி பல ஆற்றிய விழுச் சிறப்புடையது என் றெல்லாம் பாராட்டப்பெறும். புலவர் பலரைப் பெற் றெடுத்த பெருமையும் இதற்கு உண்டு. செல்லுர் கிழார் மகளுர் பெரும்பூதங்கொற்றனர், செல்லூர்க் கோசிகன் கண்ணனர் போன்ற புலவர்கள் இச்செல்லுரிற் பிறந்தவரே.

இவளைப் பிரிந்து பொருள் தேடச் செல்கின்றேன் என்கின்றனேயே, நீ செல்லும் வழியில், கண்ணிபோல் வளைந்த கொம்புகளேக் கொண்ட காட்டெருது, தான்் காணும் அணித்திடத்தே, அறுகம்புல் மேய்ந்து மகிழ்ந்து திரியும் மலேப் பசுவினேக் கண்டு, காதல் உற்று, அதைப் பெற மாட்டாமையால் பெருமூச்சுவிட்டு மர கிழலில் விழ்ந்து கிடக்கும் காட்சிகள் பல உண்டே ; அவற்றைக் கண்டு எவ்வாறு உளம் தேறிப் பொருள் தேடப் போவையோ அவ்வாறு போதல் நினக்கு இன்பம் தருவ தொன்ருே போதல் இயலுமோ? எனக்கேட்கும் தோழி பின் சொல்லாற்றல் சுவை கிறைந்து தோன்றல் காண்க!

'கண்ணி மருப்பின் அண்ணல் கல்லேறு

செங்கோல் பதவின் வார்குரல் கறிக்கும் மடக்கண் வரையா நோக்கி வெய்துற்றுப் புல்லரை உகாஅய் வரிநிழல் வதியும் இன்ன அருஞ்சுரம் இறத்தல் - இனிதோ? பெரும. இன்துணேப் பிரிந்தே."

- • , (குறுங் : கூகூர்