பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ ை. செல்லுர்க் கோசிகன் கண்ணனுர்

இவர் செல்லூரிற் பிறந்தவர்; அந்தணர் குலத்தவர்; கண்ணனர் எனும் இயற்பெயருடையவர்; இவர் பெயர் சில ஏடுகளில் செல்லுர்க் கோசங்கண்ணனர் எனவும் காணப்படுகிறது. செல்லூர், கோசர் என்பார்க்கு உரித்து ஆதலின், அவ்வூரின ராய இவர் அக்கோசர் குடியிற் பிறந் திருத்தலும் கூடும்; அவ்வாருயின், இவர் பெயர் செல்லுர்க் கோசங்கண்ணனர் என இருப்பின் பொருந்தும். கருவூர்க் கோசனர் என்பாரை நோக்கக் கோசருள் புலவர்களும் உளர் என்பது போதருதல் காண்க. மக்கட் பேற்றின் மாண்பு குறித்து இவர் கூறுவன உளங்கொளற்பாற்று; மக்களாவார் மாற்ருரும் போற்றும் மாண்புடையராதல் வேண்டும் , அத்தகைய மாண்புநிறை மக்களப் பெற்ருர், இம்மண்ணுலகில் மட்டுமேயன்றி விண்ணுலகிலும் விறு பெற்று வாழ்வர் என்று கூறும் அவர் கூற்று, 'எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப், பண்புடை மக்கள் பெறின்," என்ற குறளோடு பொருந்தி கிற்றல் காண்க. புதல்வர் செய்யும் தான்்தருமங்கள், தந்தை தாயர் தீவினைகளைப் போக்கி, கன்னிலே உய்க்கும் என்பது உயர்ந்தோர் துணிபாதலையும் உணர்க!

"இம்மை உலகத்து இசையொடும் விளங்கி மறுமை உலகமும் மறுவின்று எய்துப செறுகரும் விழையும், செயிர்தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப் பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் வாயே ஆகுதல் வாய்த்தனம்.' (அகம்: சுசு)