பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச. நல்விளக்கனுர்

கல்விளக்கு என்பதோர் ஊர்; அது யாண்டுளது என்பது விளங்கவில்லை; அவ்வூரிற் பிறந்ததனால், இவர் கல்விளக்கர்ை என அழைக்கப்பெற்றுளார். இவருடைய பாடலாக நமக்குக் கிடைத்துளது நற்றிணையில் குறிஞ்சித் திணை தழுவிவந்த பாடல் ஒன்றே.

தலைவன் ஒருநாள் வாராது ஒழியினும் வருந்துவாள் தலைமக்ள்; அவள் கண்கள் ர்ே சொரியும் ; தோள்வளே கழன்றுகுமாறு மெலிந்துவிடும் ஆனால் அவன் வரும் வழியோ கொடுமை நிறைந்தது : இளமையால் கடக்கலாற் ருத் தன் கன்று புலியால் தாக்குற்றுத் துயர் உறும் என அஞ்சிய பிடி, அதற்குக் காவலாய் உடனிருந்து அழைத்துச் செல்லும் அருமையுடையது ஒருநாள் வாராது கிற்பினும், கெடிது வருந்தும் தலைவி, அவன் வரும் அக்கொடும் வழி யில் அவனுக்கு ஏதம் உண்டாம் என அறியின் வாழாமை யும் ஆம் ஆகவே அவன் வாராதிருத்தலே நன்று இவ் வாறு அவன் வருதலாலும் துயர் உண்டு; வாராமையாலும் துயர் உண்டு என அறிந்த தோழி, அத்துயர் நீங்கற்கு வழி, அவன் அவளே விரைந்து வந்து வரைந்து கொள்வதே எனத் துணிந்து அவன் வந்த வழியினே எடுத்துக்கூறு வாள். அவன் காட்டைச் சார்ந்த காடுகளில் வாழும் கானவன், முள்ளம்பன்றியினே க் கொன்று கொணர்ந்து தர, அவன் மனேவி அதைத் தன் குடியில் உள்ளார் அனேவர்க்கும் மகிழ்ந்து அளித்து வாழும் வாழ்க்கையினேக் கண்டும், அவ் வாழ்க்கைபோல், தான்ும் வாழ எண்ணுது வரும் அவன் இனி இங்கு வாராது அமைவாகை எனக் கூறினுள் எனப் பாடிய அவர் பாட்டு, அக்கால மக்களின் மன இயல்பினே ஒருவாறு உணரத் துணைபுரிதல் காண்க!

'ஆய்மலர் மழைக்கண் தெண்பனி உறைப்பவும்,

இங்குமல் நாடன்கின் கசையி னனே.” (கற்: அலி)