பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ0. பெரும்பாக்கனுர்

ஆர்ப்பாக்கம், மணப்பாக்கம் என்பனபோல், பெரும் பாக்கம் என்பதும் ஒர் ஊர் : அவ்வூரினராதலின், இவர் பெரும்பாக்கர்ை என அழைக்கப் பெற்றுளார்.

ஒருவர் பிழைபுரிந்தாராக, அவர்பால் வெறுப்பும் ருேர், அவரைக் கடிய விரும்பியவழி, அவரை கேரே கடி வதைவிட்டு, அயலில் உள்ளார்.பால் அவரைக் கடிவதாற் பயனில்லை ; ஆகவே, அவரைக் கடியற்க என்று கூறிக் கடி யார்போல் கடிதலும் உண்டு. புலவர், தாம் பாடிய செய்யுளொன்றில் இம்முறையினேக் கையாண்டுள்ளார்.

தலைவன் ஒருவன் தான்் விரும்பிய தலைமகள் ஒருத்தி யைச் சின்னுள் பிரிந்து காணுளுயின்ை அதல்ை அவள் பெரிதும் வருந்தினுள் ஒருநாள் வந்தான்்; வந்தான்ேக் கண்டி அவள், தன் தோழியை விளித்து, தோழி! கலை வனேக் கண்டால், நின்னல் காதலிக்கப்பட்ட இவள் இவ்வாறு வருந்தவிட்டுப் பிரிதல், தும்போலும் பெரி. யோர்க்கு அழகாமோ? என்று கூறி இடித்துரையற்க!" என்று கூறினுள் எனப் பாடியுள்ளமை காண்க. ...

"தண்ணத் துறைவற் காணின், முன்னின்று

கடிய கழறல் ஒம்புமதி! தொடியோள் இன்ன ளாகத் துறத்தல் .. х. நும்மின் தகுமோ என்றனே துணிந்தே."

- (குறுங் : உகசு)