பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக. பொதுக்கயத்துக் கீரந்தையார்

பொதுக்கயம் என்பது ஒர் ஊர்; ஊரார் நீர் எடுக்கும் பொதுக்குளம், பொதுக்கயம் என்றும் அழைக்கப்பெறும்; அப்பொதுக்கயமே, அவ்வூருக்கும் பெயராகிவிட்ட்து போலும்! கீரந்தையார், கீரன் என்பாரின் தந்தையாராவர்; ஆதன் தந்தை, ஆந்தை எனவும், சாத்தன் தந்தை, சாத் தங்தை எனவும் வருதல்போல் கீரன் தந்தை, கீரந்தை என வரும். . - -

- 'நல்ல குறுந்தொகை,' எனப் போற்றப்பெறும் பெருமை வாய்ந்த குறுந்தொகைக்கண் வந்துள்ள செய்யுள் ஒன்றே, இவர் பாடிய பாடலாக இப்போது நமக்குக் கிடைத்துள ஆ. . .

.ே காதலித்த அவள், அறியாப்பருவத்தள் என்றார்க்கு, தலைவன், கண்டாரை வருத்தும் கவின் அவள்பால் உண்டு என்பதை யான் அறிவேன்; அதை அவள் அறி யாள் ; அவள் அறியாமைக்குக் காரணம், அவள் பெருஞ் செல்வம் பெற்ருரின் அருமை மகளாதலால் இனி அவள் கருதியதுதான்் யாதோ?' எனக் கூறிய பொருள் அமைய வந்துளது அச்செய்யுள் : .

'அணங்குதற்கு x

யான்தன் அறிவலே; தான்் அறியலளே;. யாங்கா குவள்கொல் தான்ே? பெருமுது செல்வர் ஒரும்ட மகளே."

(குறுங் : க.க.எ)