பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு. மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன்குமரனுர் புலவர் பெருமக்களுள் சேந்தன் என்ற பெயருடையார் பலர் உளர் ; சேந்தன்குமானுர், சேந்தன் என்பாரின் புதல்வராவர். திருவாடானேத் தாலுக்காவில் மருங்கூர் என்ற பெயருடையதோர் ஊர் உளது ; புலவர் பிறந்த மருங்கூர், இதுவோ அல்லது வேருே அறிகிலம். மருங் கூர்ப் புலவர் பலர் வாழ்ந்த பெருமையுடையது என்பது மருங்கூர்கிழார் பெருங்கண்ணன், மருங்கூர்ப் பாகைச்

சாத்தன் பூதனுர் என்ற பெயர்களால் அறியக்கிடத்தல் அறிக.

ஒரு பெண், தன் கணவன்மாட்டுப் பிறர் குறை காணுதல் கண்டு கடுஞ்சினங் கொண்டு, "என் காதலர், இவ்வுலகமே தலைகீழாக மாறித் தடுமாறும் கிலேயுற்று அழிவதாயினும், தாம் கூறிய சொல்ல அழித்து, அதற்கு மாருக நடப்பவரல்லர். ஆதலின் அவர்பால் குறைகாணுதல் ஒழிவிராக,” எனக் கூறினுள் எனப் பாடிப் பழந்தமிழ் மகளிர், தம் கணவர்மாட்டுக் கொண்டிருந்த அசைக்கலாகா கம்பிக்கையினே கன்கு எடுத்துக்காட்டினர் :

'அம்ம! வாழி தோழி! காதலர்

நிலம்புடை பெயர்வ தாயினும், கூறிய சொல்புடை பெயர்தலோ இலர்." (நற்: உஅக) தான்ுற்ற காமநோய், தணிக்கும் தலைவர் இல்லாமை யால் பெருகி வளர்ந்து, தன் வனப்பையும், தன்னேயும், எரித்து அழிப்பதற்குக் கொல்லேயில், கோவலர் சோருக்க மரத்தடியில் மூட்டிய கெருப்பு அழிக்கப்பெருமையால், அம்மரத்தின் வேர்க்கட்டையினே எரித்து அழிப்பதை உவமையாகக் கூறினுள் எனக் கூறும் புலவர் புலமைங்லம் போற்றுதற்குரியதாம் : ' $ ار. " : و

கொல்லக் கோவலர் எல்லி மாட்டிய்

பெருமர வேரடிப் போல o அருளிலேன் அம்ம! அளியேன் யானே..' (கற்:உகஅ).