பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவு. மாருேக்கத்துக் காமக்கணி

நப்பாலத்தனுர்

மாருேக்கம், கொற்கையைச் சூழ்ந்ததொரு நாடு : மாருேகம் எனவும் வழங்கப்பெறும்; 'புறத்துப்போய்

விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளே மாருேக் கத்தார், இக்காலத்தும் பெண்மகன் என்று வழங்குவர்" என்று, மாருேக்கத்தாரின், மாறுபடும் மொழியியல்பினே எடுத்துக்காட்டுவர் சேனவரையர் (தொல். சொல்: கசு ச). காமக்கணி என்ற சொல் காமாகழி என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பாம், பாலத்தனர் என்ற இயற் பெய. ருடையராய இவர், சிறப்புக் குறித்து வழங்கும் ' என்ற எழுத்தைப் பெயர்முன் பெற்று, மாருேக்கத்தே வாழ்ந்த காமக்கணியாரின் மகனுய்ப் பிறந்தமையால், மாருேக் கத்துக் காமக்கணி கப்பாலத்தனர் என வழங்கப்பெற்ருர்.

•- பாலகிலத்து மறவர், உடல் உழைத்து உயரிய வாழ் வினராய் வாழ எண்ணு இயல்பினராதலாலும், பொருள் தேடிப் போற்றிவாழும் பேரறிவு பெருக் காரணத்தாலும், தமக்கு வேண்டும் உணவிற்கும் வழியின்றிப் பலநாள் உழல்வர்; அங்கிலேயில் அவர்கள் தம்மினும் குறைந்த அறிவுடைய எறும்புகள், மாரிக்காலத்திற்கு உதவுக என மண்ணினுட் சேர்த்துவைக்கும் புல்லரிசியைக் கைப்பற்றி வாழ எண்ணும் இழிகிலேயினராவர் என்று உழைத்துப் பொருள் சேர்க்கும் எறும்புகளின் வாழ்க்கை வனப்பினே யும், அவ்வுழைப்பின் பெருமையறியாமையால், எறும்பு களின் உணவைத் திருடித்தின்னும் மறவர்களின் மானம் கெட்ட வாழ்வையும் புலவர் முறையே போற்றியும், பழித்தும் கூறியுள்ளார் :

'கோடை டேலின், வாடுபுலத்து உக்க

சிறுபுல் லுணவு நெறிபட மறுகி நுண்பல் எறும்பு கொண்டுஅளைச் செறித்த

வித்தா வல்சி வீங்குசில மறவர்.' (அகம்: க.எஎy