பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசு. மிளேக் கந்தன்

மீளே என்பது, ஊரைச்சூழ அமைந்த காவற் காட் டிற்குப் பெயராம் ; ஈண்டு, அக்காவற்காடு உடைமையால் சிறப்புற்ற மிகள் என்ற பெயருடையதோர் ஊர்ைக் குறித்து கின்றது. மிளே, புலவர் பலரின் வாழ்விடமாம் பெருமை உடையது . மிளேகிழான் நல்வேட்டனர், மி&ளப் பெருங்கந்தனர் . மிளேவேள் தித்தன் என்ற அவ்வூர்ப் புலவர்களே நோக்குக. இவர் பாரியையும், அவனுக்குரிய பறம்பு மலையினையும், அம்மலையில் உள்ள சுன்ேகளையும் பாராட்டியுள்ளார்; பாரியின் பறம்புச் சுனேயில் உள்ள ர்ே, தைத்திங்கள் காலத்தே தெளிந்து இஞ்சுவை உடைய தாம் எனப் புலவர்கள் பாராட்டுவது போன்றே இவரும் பாராட்டியுள்ளார் :

- 'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின், வாக் கினிலே ஒளி உண்டாகும்," என்ப. உரை, செயல் ஆய இவ்விரண்டிற்கும் உள்ளமே காரணமாம் உள்ளம் நன் ருயின், உரையும் நன்றாம் செயலும் கன்றாம் அது தோயின், இவையும் தோம். ஆகவேதான்், ஒருபொருள் பற்றிய ஆராய்ச்சி எழுங்கால், அப் பொருளிடத்தே முன் கூட்டியே விருப்பு, வெறுப்பினேக் கொள்ளாதிருத்தல் வேண்டும் : அப்பொருளிடத்தே வெறுப்பு உண்டாயின், அதன் குணம் தோன்ருது அதனிடத்தே விருப்பு உண் டாயின், அதன் குற்றம் தோன்ருது; ஒரு பொருளே, ஒரு காலத்தே இன்பமுடையதாத் தோன்றும் , அதுவே பிறிதொரு காலத்தே துன்பந்தருவதாத் தோன்றும். அப் பொருளிடத்தே அன்பு இருந்த காலத்தே, அது இன்பம் கிறைந்ததாகத் தோன்றும் : அதன் இடத்தே அவ் அன்பு குறைந்த காலத்தே அது அன்பம் கிறைந்த தாகத் தோன்றும். இக்கருத்தினத் தோழியின் வாயில் வைத்து விளக்கியுள்ளார் நம்புல்வர்.

தலைவன் ஒருவன் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டு விட்டான். அதனல், அவன் பண்டேபோல் தன் மனேவி