பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ0. மிளேப் பெருங்கந்தனுர்

மிளே என்ற அவ்வூரில் கந்தனர் எனும் பெயருடையார் வேறு ஒருவரும் இருந்தமையாலும், அவரினும், இவர் யாதோ ஒருவாற்ருன் உயர்ந்து விளங்கினமையாலும், இவர் மிளேப் பெருங்கந்தனர் என அழைக்கப் பெற்றுள் ளார் . இவர் பாடிய பாக்கள் குறுந்தொகை ஒன்றில் மட்டுமே இடம்பெற்றுள்ளன : காமத்தின் இயல்பினேப் பல்வேறு கண்கொண்டு நோக்கும் இவர் போக்குப் பெரிதும் பாராட்டற்குரியது. இரவிற்கு முன் வருவது மட்டுமே. மாலே எனல் பொருந்தாது விடியலும், பகலும்கூட மாலை தான்் எனக் கூறுவது கயஞ்செறிந்து காணப்படுகிறது.

தான்் காதலித்த ஒரு பெண்ணின்பால் தன் உள்ளத் தைப் பறிகொடுத்து வருந்தும் ஒருவனேக்கண்ட அவன் நண்பன், 'கின்போலும் பெருந்தகையார் இவ்வாறு காம நோயுற்றுக் கலங்குதல் தகுதியுடைத்தன்று," என்று கடிந்துரைத்தான்ே நோக்கி, நண்ப! உலகில் உள்ளார் அனேவரும், காமம் துயர் தருவது; காமம் தொல்லை விகிள விப்பது ; காமம் கொள்ளத்தகாதது என்று எதற்கும். காமம் காமம் காமம் என இதையே பழிக்கின்றனர்; ஆனால் காமம் அவர்கள் கூறுவதுபோல் துயர் தருவதும் அன்று; நோய் தருவதும் அன்று ; அது ஒரு காலத்தே. மிகுதலும், ஒரு காலத்தே குறைதலும் இல்லை; அஃது ஒருவர்பால் புதிதாகத் தோன்றுவதும் அன்று எல்லோ ரிடத்தும், எப்போதும் இருக்கும் இயற்கை உடைத்து ; யானேபர்ல் அடங்கியிருக்கும் மதம், அது குளகுத் தழை யினேத் தின்றவுடனே, வெளிப்போந்து வினைசெய்தல் போல, ஒவ்வொருவரிடத்தும் படிந்துகிடக்கும் இக்காமம், காதலிக்கத் தக்காரைக் கண்டவிடத்துத் தர்னே வெளிப் பட்டு வினையாற்றும் இயல்புடைத்தாம்; அவ்வழியே, தன்னேரில்லாத் தலைவி ஒருத்தியைக் கண்ட யானும் காதல் உற்றுக் காமநோயால் வருந்துகின்றேன்; காமத்தின் இயல்பினே அறியாதார்போல நீயும் கழறுவது என்னே ?"