பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூக, மிளைவேள் தித்தன்

- மிளே என்ற ஊரில் வாழ்ந்த வேளிர்குடியிற் பிறந் தவர் தித்தன் எனும் இயற்பெயருடையவர் என்பதல்லது இவர் வரலாறு குறித்து வேறு எதுவும் அறிதற்கில்லை. ஊர் மன்றத்தின்கண் உள்ள பொற்றைக்கல்மீது காந்தள் மலர்கள் பல மலர்ந்து தோன்றும் காட்சி, போர் செய்த யானேயின் முகத்தின்கண், அப்போரால் உண்டாய புண்கள் போலும் எனக் கூறிய உவமை, அவர் செய்யுட்கு அணிசெய்து கிற்றல் காண்க :

"பொருத யாக்னப் புகர்முகம் கடுப்ப

மன்றத் துறுகல் மீமிசைப் பலவுடன் ஒண்செங் காந்தள் அவிழும்.' (குறுங் : உஅச)

ஒரு தலைவன், தான்் காதலித்த ஒரு தலைவியை மணத் தற்கு வேண்டும் பொருளே ஈட்டி வருவான் எண்ணி வேற்றுார் சென்றிருந்தான்் ; சென்றவன் விரைவில் வங் திலன்; அதனல் அவள் வருந்தினுள்; அவன் கூறிச் சென்ற காலத்துத் தவருது வந்து மணப்பனே ? அல்லனே என அஞ்சிள்ை ; அவன் அவ்வாறு வந்து மணவாவிடின், :ஊரிற் பெரும்பழிச்சொல் உண்டாம் என எண்ணியும் இரங்கினுள் ஊரில் ஒரு பெண்ணிற்கு உண்டாம் நன்மை .யும், தீமையும் அவ்வூரார் அனேவர்க்கும் உண்டான நன்மை -யும், தீமையுமாம் ; ஊரார்க்கு அவ்வறிவு இருக்குமாயின், அவர்கள், அவன் மணவாமையால் அவளைப் பழிகூற எண்ணுர் என்பதை அறிவாள் அவள் தோழி , அறிந்த அவள், அவன் வாராமையால் அலர் உண்டாம் என அஞ்சிய தலைமகளே நோக்கி, "தோழி ! ஊரார் அறிவற்றவ .ால்லர் ஆதலின், அவன் செய்த தவறு குறித்து அவர் கம்மை ஏசுவதும் செய்வரோ? செய்யார் ; ஆகவே ஆற்றி .யிரு" எனக் கூறினுள் எனப் பாடி, ஊரார் கடமை இது

என உணர்த்தியுள்ளார் புலவர்.

'காடன், அறவ ளுயினும், அல்லயிைனும்

கம் எசுவரோ ? தம்மிலர் கொல்லோ ?” (குறுங் : உஅச)

f