பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மாநகர்ப் புலவர்கள்

ஞாயிறு எத்திசைச் செலினும் அத்திசையே நோக்கும் இயல்பின்வாய நெருஞ்சிப் பூக்களைப்போல், வறுமையால் வாடிய யாழ்ப்பாணர்கள் கையில் ஏந்திய ஏற்கும் மண்டை கொண்பெருங்கிழானின் மார்பையே நோக்கிக் கிடக்கும் .எனவும் கூறும் புலவர் பாராட்டுரைகள் அக் கொண்கானங் .கிழானின் பெருமையினைப் புலப்படுத்தி கிற்றல் காண்க,

'பாமூர் நெருஞ்சிப் பசலை வான்பூ

ஏர்தரு சுடரின் எதிர்கொண் டாஅங்கு, இலம்படு புலவர் மண்டை, விளங்குபுகழ்க் கொண்பெருங் கானத்துக் கிழவன் - தண்தார் அகலம் நோக்கின மலர்ந்தே.' (புறம் : கடுடு)

கொண்கானம் கிழாசீனப் பாராட்டிய மற்குெரு .பாட்டில், மக்கள், அலே.அலேக்கும் பெருங்கடலின் கரை .யருகே இருந்தபோதும், ர்ேவேட்கை உற்றக்கால், அக் கடல் நீர் உப்பாதல் அறிந்து, உண்ணும் நீர் ஈண்டு யாண் டேனும் உண்டோ? உண்ணும் ர்ே ஈண்டு யாண்டேனும் உண்டோ? என எதிர்வருவாரையெல்லாம் கேட்டு, அது உள்ள இடமே தேடிச் செல்வர் : அதைப்போலவே, புலவர் .களும் பேரரசர் அவையருகே வாழினும், அவ்வரசர்பால் கொடைக்குணம் இன்ருதல் அறிந்து, அவரைப் பாராட்ட எண்ணுது, குற்றம் கீர்ந்த கொடைக்குணம் உடையாரைத் தேடிச்சென்று செய்யுள் பாடிச் சிறப்பிப்பர் என்று கூறும் .புலவர் பண்பு பாராட்டற்குரியதர்ம். - s!..."

"திரைபொரு முந்நீர்க் கரைகணிச் செலினும்,

அறியுநர்க் காணின், வேட்கை நீக்கும் சின்னர் வினவுவர் மாந்தர்; அதுபோல் அரசர் உழைய ராகவும். புரைதபு - வள்ளியோர்ப் படர்குவர் புலவர்.' (புறம் : கடுச)

பாரம், பாழி முதலிய பேரூர்களுக்கும், ஏழில் மலைக்கும் உரியவனும், கொண்கானத்தின் ஒரு பகுதி நாட்டை ஆண்டிருந்தோனும், வேளிர்வழிவந்தவனும் ஆய. ஒருகாலத்தே தன்னே எதிர்த்த வேந்தன்