பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சா. வாயில் இளங்கண்ணன்

வாயில் என்பதோர் ஊர்; அது யாண்டுளது என்பதை அறிதற்கியலாது எனினும், அது புலவர் ப்லரை சன்ற பேறுடையது என்பது மட்டும் தெளிவாம்; வாயிலான் தேவன் என்பாரும் இவ்வூரினரே ஆவர். பெயர்களுக்கு முன்னர் இளமைப் பொருள் உணர்த்தும் சொல்லைச் சேர்த்து வழங்குவதை இக்கால மக்களும், அக்கால மக்க :ளும் ஒருங்கே விரும்புவராவர். பாலகிருஷ்ணன், பாலச் சந்திரன், பாலசுந்தரன், பாலசுப்பிரமணியன் என்ற இக் காலப் பெயர்களையும், இளங்கீரன், இளந்திரையன், இளக் தேவன், இளநாகன், இளம்பூதன், இளவெயினன் என்ற அக்காலப் பெயர்களேயும் நோக்குக. அவ்வாறே இப் புலவரும் இளங்கண்ணன் என அழைக்கப்பெற்றுள்ளார்.

பிடியை விரும்பிய களிறு, அதைத் தேடிக் குன்றை அடைய, ஆண்டுள்ள குறவர் அதன் வருகை அறிந்து ஆரவாரித்தாராக, அவர் ஆரவாரத்தால், தான்் எண்ணி வந்த எண்ணம் ஈடேறப் பெருமையால் பெருஞ்சினமுற்று, அக்குறவர் வாழ் ஊர்மன்றத்தைப் பாழாக்கிச் செல்லும் எனக் கூறும் இவர் கூற்று யானைகளின் இயல்பறியத் துணை புரிதல் காண்க : - - - "நாகுபிடி நயந்த முளைக்கோட்டு இளங்களிறு

குன்றம் கண்ணிக் குறவர் ஆர்ப்ப மன்றம் போழும்.' - . (குறுங் : க.சக) உயர் குடிப்பிறந்தார் தம் உள்ளத்தே ஒன்றை விரும் பினராயின், அதைப் பலரும் அறியக்கூறிக் குறைதீர காணும் நற்பண்புடையராவர் என்பதைத் தலைமகன் தன் உள்ளத்தே தலைமகளேப் பெற விரும்பி, அவளைப் பெற மாட்டாது வருந்தியவிடத்தும், தன் குறையினத் தோழி அறியக் கூறும் ஆற்றல் இலய்ை அஃகின்ை எனக் கூறுவ தால் கூறித் தெளிவுறுத்தினர்.

"கல்லகம் நயந்துதான்் உயங்கிச்

சொல்லவும் ஆகாது அஃகியோனே. (குறுங் : க.ச.சு)