பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடு. விரியூர் நக்கனுர்

விரியூர் என்ற பெயருடைய ஊர்கள் பல உள. சேர காட்டு வள்ளுவநாட்டில் விரியூர் என்ருேர் ஊர் உளது; தென்னுர்க்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சிக்கு அணித்தே ஒரு விரியூர் உளது; பன்னிரண்டாம் நூற்ருண்டுக் கல் வெட்டொன்று, வடபெண்ணேக்கரையில் ஒரு விரியூரைக் குறிப்பிடுகிறது. “ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் பாக்கைகாட்டு விரியூர்ப் பெண்ணுற்று வடகரை" (Nell ins, NO. 108). இவற்றுள் நக்களுர் பிறந்த விரியூர் எது என்பதை அறிந்துகொள்வதற்கில்லே, நக்கனர் என்ற பெயர், சிவபிரான் திருநாமங்களுள் ஒன்று.

வீரன் வேல், பிறருடைய வேல் போல்வதன்று; அது பெருந்தகைமை மிக்க பெருவேல்; போரில்லாக் காலத்தே, புழுதி படிந்து விட்டின் ஒரு மூலையிலோ, வீட்டின் கூரை யிலோ செருகப்பட்டுக் கிடக்கும்; ஆனால் போர் வந்து ற் றது எனில், மங்கல மகளிர் பாட, பாணர் யாழ் இசைத்துப் பாராட்ட, நீர்நிலைக்குச் சென்று நீராடி, மாலையணிந்து, தெருவில் உலாவந்து, பகைவேந்தர் யானேகளின் முகத்தில் தைத்து உருவிச்செல்லும் என்று, தாம் பாராட்டிய பெரு, ான் ஒருவன் கைவேலைச் சிறப்பித்துப் பாடி, பழங்கால மக்கள், படைக்கலங்களே வைத்துப் போற்றிய வழக்காற். றின்ே உணர்த்தியுள்ளார்.

"பிறர்வேல் போலா தாகி. இவ்வூர்

மறவன் வேலோபெருந்தகை உடைத்தே ; இரும்புறம் நீறும் ஆடிக், கலந்து, இடைக் குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும் மங்கல மகளிரொடு மாலை சூட்டி 3:... * இன்குரல், இரும்பை யாழொடு ததும்பத் தெண்ணீர்ப் படுவினும், தெருவினும் திரிந்து மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு இருங்கடல் தான்ே வேந்தர் . . . . " ப்ெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனதே.' . . . . . . . . ." . (புறம்: ä೬೭}