பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விற்றுாற்று மூதெயினளுள் 8:

"மைப்பறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு

வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப் புள்ளுப் புணர்ந்து இனிய வாகத், தெள்ளொளி அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கள் சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்துக் கடிநகர் புனேந்து கடவுட் பேணிப் படுமண முழவொடு பரூஉப்பன இமிழி. வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப் பூக்கனும் இமையார் கோக்குபு மறைய, மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலே பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத் தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற மண்ணுமணி யன்ன மாயிதழ்ப் பாவைத் தண்ணறு முகையொடு வெண்ணுால் சூட்டிக் தூவுடைப் பொலிந்து, மேவரத் துவன்றி, - மழைபட் டன்ன மணன்மலி பந்தர் - - இழையணி சிறப்பின் பெயர்வியர்ப்பு ஆற்றித் தமர் நமக்கு ஈத்த தலைகாள் இரவு.” (அக: காடசு) உழவர், தம்மோடு தொழிலாற்றும் பிற உழவர்களே யும் அழைத்துக் கொண்டே இருள் புலரும் விடியற் காலத்தே களம் அடைந்து, ஆங்குள்ள வைக்கோற்போரைப் பிரித்துக் கடாவிட்டு அகலத்து எடுத்துத் துாற்ருப்பொலி யினேக், கூளங்கள் வானே மறைக்கும் மேகங்களைப்போல் திசைகளேயெல்லாம் மறைக்குமாறு பரந்து செல்லத் துாற்றி, அத் தொழிலால் உண்டாய உடற்றளர்ச்சி அகலு மாறு தம் மனைவிமார் கொணர்ந்த, கொள்ளேயும், பயற். றிஆனயும் பாலோடு கலந்து ஆக்கியனவும், வெள்ளிக் கம்பியை ஒரளவாக கறுக்கிவைத்தாற் போன்றனவுமாகிய, உணவினே, உண்டது போதும் என உரைக்குமளவு உண்டு, பின்னர்த் தூற்றிக்கொண்ட நெல்லைக் கூடாகக் கட்டி விட்டு, ஞாயிற்றின் வெப்பம் அகலுமாறு, தங்கள் எருதுக ளோடு, ஆங்குள்ள மருத மரநிழலிலே தங்குவர். எனக. கூறும் உழவர் வாழ்வு, உள்ளவாறு உணர்த்தப்பட்டுளது கண்டு உளம் மகிழ்வோமாக.