பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மாநகர்ப் புலவர்கள்.

'சங்குல் ஒதைக் கவிமகிழ் உழவர்,

பொங்கழி முகந்த தாவில் நுண்துகள், மங்குல் வானின் மாதிரம் மறைப்ப, - வைகுபுலர் விடியல் வைபெயர்த்து ஆட்டித் தொழிற் செருக்கு அனந்தர் வீட........... s

கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளிக் கோல்வரைந் தன்ன வாலவிழ் மிதவை வாங்குகை தடுத்த பின்றை, ஓங்கிய பருதியங் குப்பை சுற்றிப், பகல்செல ジシ மருத மரகிழல் எருதொடு வதியும்.' (அகம் : கூஎ) புலவர் மூதெயினனர்,'மாங்காடு என்ருேர் ஊர் உளது: அது கன்னியர் காவலேயுடையது; தன் மந்தி பசித்துயரால் வருந்துவது கண்டு, அதன் பசிபோக்க வேண்டி, ஆண்டுக் காய்த்துப் பழுத்துக்கிடக்கும் பலாவின் சுளேயினத் தோண்டி எடுப்பின், அக்கடுவனேயும் துயர்க்கு உள்ளாக்கும் அணங்குகள உறையும் அரிய காவலே உடையது,"என்று கூறுகிருர். இங்குக் கூறும் இது, சிலப் பதிகாரத்தே கூறப்பெறும் மாங்காடோ அன்றி வேருே அறிகிலம். - -

'கயந்தல மந்தி உயங்குபசி களை இயர்

பார்ப்பின் தங்தை பழச்சுளே தொடினும் கணிநோய் ஏய்க்கும் பனிகூர் அடுக்கத்து !. -

மகளிர் மாங்காடு.” (அகம் : உஅ.அ) ஆண்மகன் ஒருவன், தன் மனேவியைக் கூறுங்கால், வெறுப்பற்றவள்; கற்பாற் கவினுற்றவள்; என் உயிர் தங்குதற்காம் உடல் போன்றவள் என்றெல்லாம் பாராட் டிக் கூறினன் எனப் பாடிப் பெண்டிரைப் போற்ற வேண்டிய பண்பினே அறிவித்துள்ளார் புலவர். 'உவர் நீங்கு கற்பின்எம் உயிர்உடம் படுவி (அகம்:கங்க). போர்வை நீங்கப்பெற்ற தலைமகள், உறையின் ங்ேகிய வாள் போல் விளக்கமுற்று விளங்கினுள் எனக் கூறும் உவமை வியக்கத் தக்கதாம்: "போர்வை வவ்வலின், உறைகழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப. '