பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சஎ. வீரை வெளியன் தித்தனும்

புறநானூறு பாடிய புலவர் வரிசையில், விரை வெளிய ஞர் என்பார் ஒருவரும், அகநானூறு பாடிய புலவர் வரிசையில், வீரை வெளியன் தித்தனர் என்பார் ஒருவரும் உளர். இவ் விரு பெயர்களில் வரும் விரை, வெளி ஆகிய இரு சொற்களேயும், ஒரு சொல்லாகக்கொண்டு, அது விரை வெளி என்ற ஊரைக் குறிக்கவரும் பெயராம் எனப் பொருள் கூறி, வீரை வெளியன் தித்தனர் என்பது, விரை வெளியிற் பிறந்த தித்தனர் எனப் பொருள்படும் ஆதலின், இரு பெயர்களும் ஒருவரையே குறிக்கும் எனக் கொள்வர் சிலர் பரணர் பாக்களில், உறையூரில் வாழ்ந்தா ைெருவன் தித்தன் வெளியன் என்ற பெயருடையணுகக் குறிக்கப்பட் டிருத்தலேக்கொண்டு, வெளியன் என்பதே ஒருவர் பெயர் ; ஆதலின் விரை என்பது அவர் பிறந்த அளரின் பெயராம் . அவ்வூர் பெண்ணேயாற்றின் வடகரை காட்டில் உளது . ஆகவே, வீரை வெளியன் என்ற தொடர், விரைநகரிற் பிறந்த வெளியன் எனப் பொருள்படும் ; இவர் வேறு வீரை வெளியன் தித்தனுர் என்பார் வேறு : வேண்டுமாயின், இவரை விரை வெளியனரின் மகன் எனக்

கோடல் பொருந்தும் என்பர் மற்றும் சிலர்.

'தித்தன், தித்தன் வெளியன், வெளியன் தித்தன் என்னும் பெயர்களே நோக்குமிடத்து, முதலில் தித்தன் என்பவனும், அவனுக்குப்பின், கித்தன் மகளுகிய வெளியன் என்பவனும், வெளியன் மகனுகிய தித்தன் என்பவனும் வ, ழ் ங் தி ரு த் த ல் வேண்டும் எனத் தோன்றுகிறது. வெளியன தித்தன் என்பவன், தித்த ஆணுக்குப் பெயரணுவான் ஆகலின், பாட்டனுகிய தித்தன.அ. பெயர் இடப்பெற்ருன் எனக் கொள்ளுதல் சிறக்கும்." என்று கூறுவாரும் உளர் ஆனால், வெளியஞர், வெளியன் கித்தனர், கித்தன் வெளியன் என்னும் பெயர்களே.நோக்கு மிடத்து மேற்கூறிய முறை மாறுபட்டுத் தோன்றும்ாக லின், அவ்வாறு கொள்ளுதல் பொருந்தாது என்க. o