பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரி 55.

பாரியின் புகழ் நாள்தோறும் பெருகிற்று; சேய்நாடு’ களிலும் அது பரவிற்று : தமிழகமெங்கும் உள்ள பாணர், கூத்தர் முதலாய இரவலர்களும், புலவர்களும் பாரியின் புகழன்றிப் பிறர் புகழ் பாட்ாராயினர் ; இவ்வாறு அவன் புகழ் வளர்தல், அப்போது தமிழ் நாடாண்ட மூவேந்தர் உள்ளத்தில் பொருமைத் தீயை மூட்டிற்று : “பேரரசர் நாமிருக்கப் பாரியின் புகழ் பாரெங்கும் பரவுவதா?’ என்று எண்ணினர் ; புகழால் அவனேவிட உயர்தல் தம்மால் இய. லாது என்பதையும், அவன் உயிரோடுள்ளவரை தம் புகழ் உயரவழியில்லை என்பதையும் உணர்ந்தனர்; ஆகவே, அவனே எவ்வாருயினும் அழித்துவிட முடிவு செய்தனர்; மூவேந்தரும் ஒன்று கூடினர்; மூவேந்தர் பண்டயும் ஒன்று கூடின; பறம்பு மலையை முற்றி அழிக்க முனேந்தனர்; அவ்வாறே மூவேந்தர் படையும் பறம்பாண முற்றிக் கொண்டன. - . . . . . . . * . . . . . . . . . .

பாரியின் புகழ்கேட்டு அவனைப் பாடிப் பரிசில் பெற வேண்டி வந்து, அவன் அன்பால் பிணைப்புண்டு, அவனே விட்டுப் பிரிய மாட்டாப் பெருகிலேயுற்று, அவனேடு அப் பறம்பு மலையிலேயே தங்கிவிட்ட கபிலர், மூவேந்தர் முற்றி யிருப்பது கண்டார்; அவர் செயல் விழலுக்கிறைத்தி நீராகுமே யல்லாமல் பயன்தாராது என்பதை அறிந்த கபிலர், அரசர் மூவர்க்கும் அறிவுரை மொழிந்து முற்று கையை ஒழிக்க எண்ணினர். . . . .

முற்றுகையிடுவதால், அதனுள் இருப்போர் வெளி யிலும், வெளியிலிருப்போர் உள்ளும் செல்லாதவாறு தடை செய்யப்படுவர்; அதனல், உள்ளிருப்போர்க்கு வேண்டும் உணவுப் பொருள்கள் வெளியே யிருந்து வருதல் இயலாது போம்; அங்கிலை ஏற்படின், உள்ளிருப்போர் உணவில்லாக் குறையால் வருந்தி, அக்கோட்டையைத் திறந்து, பகை வர்க்குப் பணிந்து போவர்; இதுவே, முற்றுகையின் நோக்கம்; இவ் வெண்ணம் கொண்டே பறம்பாணை மூவேக் தரும் முற்றுகையிட்டனர்; ஆனல், அவர் எண்ணியது தவறு; அவர் போட்ட போர்த்திட்டம் பிழைபட்டது. என்பதைக் கபிலர் அறிவார்.