பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வள்ளல்கள்

ஆகவே, அதை அவர்க்கு உணர்த்தி முற்றுகை ஒழித்து நீங்குமாறு வேண்ட விரும்பினர்; அரண்விட்டு வெளியே வந்தார்; வேந்தர் மூவரையும் அழைத்தார்; வேந்தர் பெருமக்களே! பறம்பு மலைக்கோட்டை நீங்கள் சினேப்பதுபோல் அவ்வளவு குறைபாடு உடையதன்று; அவ் வரணைக் கைப்பற்றுவது அத்துணை எளிதில் ஆகாது; பேரரசராய விேர் மூவரும் ஒன்று கூடியே முற்றுகை மேற்கொண்டுள்ளீர் எனினும், பறம்பாணேப் பாழ்செய்தல் இயலாது; உள்ளிருப்போர் உங்கட்கு என்றும் பணிய எண்ணுர்; பணிந்து போகுமாறு அவர்கள் வாழ்வில் என் ஆறும் குறை ஏற்படாது; காரணம், உழுதொழில் வேண்டா மலே பெறக் கூட்டிய உணவுப் பொருள்கட்கு ஆங்குக் குறை வில்லை; நெல்விளையும் மூங்கிற் காடுகள் கிறைய உண்டு; அம்மூங்கில் அரிசியே அவர்களுக்கு ஆண்டு முழுமைக்கும் ஆம், பறம்புமலை எங்கும் பலாமரங்கள் நிறைந்துள்ளன; அப்பலாமரங்கள் ஒவ்வொன்றும் பெரும் பெரும் பழங்கள் பலவுடையன; பூமிக் கடியில் மறைந்து மண்டிக் கிடக்கும் வள்ளிக் கிழங்கு தோண்டிய இடங்களிலெல்லாம் கோன் ஆறும்; அம்மலையில் ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருக்கும் தேன் கூடுகளினின்றும் தேன் தான்ுகவே வழிந்து பாயும். இதல்ை, உள்ளிருப்போர்க்கு உணவுக் குறையே உண்டா காது; இடநெருக்கடி உண்டாகி ஒருவேளை பணிதலும் கூடும் என எண்ணுவீராயின், அதற்கும் வழியில்லை: பறம்பு, வான்போல் பரந்த இடம் உடையது; நீர்க்குறை உண்டாகாதா? நிலைகுலைந்துப் பணியாரா? என்ற வேட்கை உங்கட்கு எழுதல் கூடும்; ஆனால் பறம்பு மலை நீர்ச்சுனே பல கிறைந்தது; வானத்து மீன்களை எண் னிக் காணல் எவ்வாறு இயலாதோ, அவ்வாறே, அம் மலையில் உள்ள உண்னு நீர்ச்சுனைகளை எண்ணிக் காணலும் இயலாது; ஆகவே, எவ்வகையாலும் குறையுடையாால்லர் பறம்பினுள் உள்ளார்; உங்கள் படை பெரியது என்பதை நான் அறிவேன்; காவற் காட்டு மாங்கள் ஒவ்வொன்றி னும் ஒவ்விெரு பானே எனக் கட்டிவைத்துள்ளீர்கள். களம் எங்கு நோக்கினும் தேர் வரிசைகளையே காணுகின்