பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேகன் 79

கொடையாலும், கொற்றத்தாலும் சிறந்த பேகன் பால் தீயொழுக்கம் ஒன்றும் குடிகொண்டிருந்தது ; அவன், அழகே உருவென வந்த, காரிகையர்க்குக் கற்புே பொற் புடை அணியாம் எனக் கருதும் கண்ணகி எனும் பெய குடையாள மனேவியாகப் பெற்றிருந்தும், அவள் உண் இதும், உறங்காதும், கல்லன உடாதும் இருந்து ஒயாது ஆழுது விற்குமாறு அவளேக் கைவிட்டு, நல்லூரில் வாழ்ந் திருந்த பரத்தை யொருத்தியோடு உறவுகொண்டு அவ. ளோடு ஆங்கு வாழ்வதை மேற்கொண்டான்.

பகனேப் பாடிப் பொருள்பெற வேண்டும் என்ற பெரு விருப்பினராய கபிலர், அவன் மலை நோக்கிச் செல் வாாயினர்; செல்வார், வழியில் மழையின்றி வருந்திய அவன் நாட்டுக் குறவர்கள், மழை வேண்டிக் கடவுளே வழிபடுவதையும், உடனே பெருமழை பெய்வதையும், தேவைக்கு மேலும் மழைபெய்யக் கண்டு, 'மழைபோதும்; கிறுத்தித் துணைபுரிக' என மறுவலும் கடவுளே வேண்ட, மழை மேகம் அவ்விடம் விட்டுப் பெயர்ந்து அப்பாற் செல் வகையும், குறவர், மழை நின்ற மகிழ்ச்சியால் தினேயுண்டு. களிப்பதையும் கண்டு கொண்டே சென்றார் : கடைசியில், முரசு முழங்குவதுபோல் ஒலித்துக் கொண்டோடும் மலை பருவியின் அருகே அமைந்திருந்த பேகன் பெருமனே யடைந்தார் வாயிற்கண் இருந்தவாறே, உள்ளிருப்போர்க் குத் தம் வருகையினே உணர்த்தினர் : சிறிது நேரத்திற் கெல்லாம் ஆண்டு அவர் கண்ட காட்சி, அவர் உள்ளத்தைக் கலக்குவதாயிற்று; பேகனின் மனைவியாம் மாண்புடைய ளாய கண்ணகி, வாயிற்புறத்தே வந்து கின்று வருக’ என வரவேற்பதற்கு மாருக, வாய்விட்டு அழுவதையும், அவள் கண்கள் கண்ணிர் உகுத்துக் கலங்குவதையும் கண் டார்; கலங்குதற்குக் காரணம் யாது!’ எனக் கனிவுடன் கேட்டார் . அதற்கு அவள், பெரியீர் ! தலைவர் பேகன், ஈண்டு வாழ்வன்த வெறுத்து, நல்லூர்ப் பரத்தை யொருத்தி பொடு வாழ்கிருர் ; அதனல், என்மனே நோக்கி வருவார்க்கு விருந்தளித்து வாழும் மாண்பு எனக்கு இல்லையாயிற்று” எனக் கூறி வருந்தி நின்முள்.