பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சத்தியாக் ரகம் அவன் சர்க்கார் சட்டங்களையும் உத்திரவுகளையும் கீழ்ப் படிய சாத்வீகமாப் மறுத்து, அகல்ை ஏற்படும் துன்பங் களே எல்லாம் மனமொத்து அநுபவிக்கிருன். இவ்விதம் ஆன்மா தேர்ச்சியடைகின்றது. இதில் சக்தி யொன்றும் விணுவதில்லை. இப்படிச் சாத்வீகமாப் மறுப்பதில்ஏதேனும் கேடுகள் ஏற்படின் அவைகளைச்சத்தியாக்கிாகியும் அவன் தோழர்களுமே அநுபவிப்பர். சத்யாக்ாகி அதிகாரிகளோடு கலகஞ் செய்வதில்லை. அதிகாரிகளே மனப்பூர்வமாக அவ னைப் பணிவர். அவனே ஆயுதத்தால் வெல்ல முடியாகென்று அவர்களுக்குத் தெரியும். அவனுடைய சம்மதமின்றி, அவ னைத் தங்கள் மனம் போல் நடக்கும்படி செய்ய முடியாது. இதுவே முழு சுயராஜ்யமாகும்; ஏனெனில் அதில் பூர்ன சுதந்திரமும் அடங்கி யிருக்கின்றது. நாகரீக முள்ள அரசர்களிடம் மட்டுத்தான் இப்படிச் சாத்விக மாப் எதிர்க்க முடியுமென்று கினேக்க வேண்டாம். எவ் வளவு கடினமான கல் மனமும் ஆன்ம சக்தியில் எழும் அக்கினியில் இளகி விடும். கொடுங்கோன்மை புருவான நீரோ சக்ரவர்த்தியுங் கூட அன்பின் முன் ஆட்டுக்குட்டி போல் அடங்கி விடுவான். இது புனேந்துரை யன்று. கூட்டல், கழித்தல் போல் உண்மையானதே. இத்தகைய சத்யாக்ரகம் இந்தியாவின் விசேஷ ஆயுகமாகும். மற்ற ஆயுதங்களும் இருந்திருக்கின்றன. ஆல்ை அதிகமாகப் போற்றப்பட்டது இதுவே. இது சர்வ வியாபகமுள்ளது; எக்காலத்திலும், எச்சந்தர்ப்பத்திலும் இதை உபயோகிக்க முடியும். இதை உபயோகிக்கக் காங்கிரஸின் உத்திரவு வேண்டிய அவசிய மில்லை. இதன் சக்தியை அறிந்தவன் உபயோகியாமலிருக்க முடியாது. எப்படிக் கண்ணிமை கண்ணேத் தானகவே காக்கின்றதோ, அப்படியே சத்யாக் ரகமும் ஆன்மாவின் சுகந்திரத்தைத் தானகவே காக் கின்றது. - ஆனல் பொய்க்கோ இதற்கு மாறுபட்ட குணங்கள் உண்டு. ஐரோப்பாவில் கடந்து கொண்டிருக்கும் புத்தமே