பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியாக்ரகம் 15 இதற்கு உதாரணமாகும். ஒரு தேசம் மற்ருேர் தேசத்தை புஜ பலத்தை மட்டுங் கொண்டு ஜயித்து விட்டால் ஜயித்த தேசத்தின் விஷயம் கியாயமானதென்றும், தோற்ற தேசத் தின் விஷயம் அநியாயமானதென்றும், சொல்வதற்கு என்ன கியாயமோ ? அநேகமாய் பலவான் பலஹீனனேக் கெடுத்து வாழ்வதைக் காண்கிருேம். புஜபலச் சண்டை யில் தோற்றதால் பலவீனனுடைய விவகாரம் தப்பென் றும் ஜயித்ததால் பலவானுடைய விவகாரம் சரியென்றும் சொல்வதாகாது. புஜபலத்தை உபயோகிப்பவன் கான் கையாளும் முறைகள் சரியானவையா யென்று யோசிப்ப தில்லை. முறைகள் எவையானலும் சரி, தன் கார்யம் மட் டும் கைகூட வேண்டும். இது தர்ம மன்று அதர்மம், தர்மத்தில் பொப், குரூரம், கொலை முதலியவை எள்ளள வும் கிடையாது. அன்பிற்கும் உண்மைக்கும் தக்கவாறே தர்மத்தின் அளவுமாகும். இவ்விரண்டிற்கும் பதிலாக ஸ்வர்க்கமே கிடைத்தாலும் வேண்டத் தக்கதன்று. உண் மையை யிழந்து ஸ்வராஜ்யம் பெறுவதிலும் பயனில்லை. உண்மையை யிழத்தலே ஒரு தேசத்தின் அழிவிற்கு அஸ்திவாரம். புஜபலத்தை நம்புபவன் பொறுமையை யிழந்து, தான் பகைவன் என்று எண்ணுபவன் இறந்து விட வேண்டுமென்று விரும்புவான். அவ்விருப்பத்தின் பலன் ஒன்று தான் ; பகைமை பெருகும். தோற்றவன் பழி வாங்கச் சபதஞ் செய்து கொண்டு, அதைச் சாதித் துக் கொள்ள ஏற்ற சமயத்திற்காகக் காத்திருப்பான். இவ்விதம் பழி வாங்கும் எண்ணம் தகப்பனிடம் இருந்து. மகனுக்கு இறங்கும்.) இந்தியா தேசம் இந்த புஜபல வழி பாட்டில் இறங்காதிருக்க விரும்புகிறேன். குத்யாக்ர கத்தை அதுஷ்டிப்பதில் முதலில் ஏமாற்றமடைய் வேண்டி வரலாம். சில காலம் வரை யாகொரு கன்மையுங் தோன் மு.மல் இருக்கலாம். ஆனல் சத்யாக் ரகமே முடிவில் ஜய மடையும். புஜபலத்தை நம்பினவன் செக்கு மாடுபோல் சுற்றிச் சுற்றி வருவான்; அப்படி வருவது சலனமே