பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:28 சத்தியாக்ரகம் சாத்வீகமாய் எதிர்ப்பது சுலபமான காரியத்தான். ஆல்ை அது போலவே கஷ்டமுமான காரியமாகும். 14-வய துப் பையன் சாத்வீகமாய்" எதிர்ப்பதையும் பார்த்திருக்கி றேன். அதுபோலவே நோயாளிகள் எதிர்ப்பதையும் பார்த்திருக்கிறேன். ஆல்ை தேக பலமுடையவர்கள் சாத் வீக எதிர்ப்பைக் கைக் கொள்ள முடியாமலிருப்பதையும் பார்த்திருக்கிறேன். மிக்க அநுபவத்தின் பேரில் எனக் குத் தோன்றுவது யாதெனில், சாத்வீக எதிர்ப்பைக் கையாள விரும்புவோர் பூர்ண பிரம்மசரியத்தை அனு சரிக்க வேண்டும், வறுமையை ஏற்றுக் கொள்ள வேண் டும், உண்மையை விட்டு விலகக் கூடாது, அஞ்சா மையை விர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்பதே. கஷ்டமென்று எண்ணி இவைகளை அனுஷ்டிக்காமல் இரு க்க வேண்டாம். தானுக வரும் எந்தக் கஷ்டத்தையும் துன்பத்தையும் தாங்கிக் கொள்ளப் போதுமான தைர்யத், தைக் கடவுள் மனிதனுக்கு அளித்தே யிருக்கின்மூர். 11 சத்யாக்ரகம் என்பதன் பதப்பொருள் சக்தியத்தைக் கடைப் பிடித்தல் என்பதாகும். அதல்ை அது சத்திய சக்தியாகும். அதை நான் அன்பு சக்தி என்றும் ஆன்ம சக்தி என்றும் கூறுகிறேன். சத்யாக் சகத்தை அனுஷ் டிக்க ஆரம்பித்த பொழுது, உண்மையை நாடுவோன் எதிரிக்குத் தீமை செப்பக் கூடாது என்பதையும், எதிரி பைப் பொறுமையாலும் அனுதாபத்தாலுமே திருத்த வேண்டும் என்பதையும் அறிந்தேன். ஏனெனில் ஒருவ னுக்குச் சரியாகத் தோன்றுவது மற்றவனுக்குத் தவருகக் தோன்றக் கூடும். பொறுமை என்பது கானே துன்பத்தை ஏற்றுக் கொள்ளுதல் என்று பொருள் படும். அதல்ை சத்யாக்கிரகம் என்பது எதிரிக்குத் துன்பம் செய்யாமல் தான் துன்பத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் சத்தியத்தை கிலைநாட்டுவதாகும்.