பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


போது ஓய்வின் விளைவுகளாக கலை, பண்பு, இவைகளை அல்ல, கருத்தற்ற களியாட்டம், வேதனை யூட்டும் வெறியாட்டம், ஆணவ ஆர்ப்பாட்டம், இவைகளையே காண முடியும்.

ரோம் சாம்ராஜ்யத்திலே ஒரு விசித்திரமான அரங்கம். பள்ளத்தில் அரங்கம்--பார்வையாளர்கள் உயரத்தில் அமர்ந்திருப்பர். அரங்கத்திலே வீரப் போர் நடைபெறும். மல்யுத்தமல்ல--வாட்போர் அல்ல--பலசாலிக்கும் வலிமை சாலிக்கும் அல்ல--மனிதனுக்கும் சிங்கத்துக்கும் சண்டை--பதை பதைக்கும் மனிதன். பசியுடன் உள்ள சிங்கம்--பயங்கரமான போர், பள்ளத்தில். மேலே சீமான்கள். சீமாட்டிகள் ரசிக்க. கர்ஜனை செய்யும் காட்டரசன் வாலைச் சுழற்றித்தரையில் அடிக்கும். பயத்தால் மனிதனின் பற்கள் ஒன்றோடொன்று உராயும், மேலே சீமாட்டிகள் சிரிப்பொலியும், கைதட்டுவதால் எழும் வளையொலியும் கிளம்பும்; சீமான்கள் சொக்குவர். இரத்தம் பீறிட்டு வரும்--மனிதனுக்கு. சீமான்கள் மேலே இருந்து ஆரவரம்செய்வர்--விடாதே; விலகாதே; என்று. ஆயுதமற்ற மனிதனுக்கு உற்சாக மூட்டுபவர் பசியாற் புதிய பலம்பெற்ற சிங்கத்தைத் தாக்கும்படி காட்டரசன் கிழித்தெறிவான் மனிதனை கீழே--அரங்கத்தில்--மேலே மேட்டுக் குடியினரான மனித மிருகங்கள். ஓய்வு நேரத்தை, ரோம் நாட்டுச் சீமான்கள் பயன்படுத்திய வகைகளிலே இதுவொன்று. மனிதனை மிருகம் கொல்வது கண்டுகளிக்கும் பொழுதுபோக்கு

ஓய்வு சிலருக்கு--வேலை பலருக்கு என்ற--முறை மாறினாலொழிய ஓய்வு சமூக உயர்வுக்குப் பயன்படும் பண்பு ஆக முடியாது. வாழ்க்கைத்தரம் மட்டமாக இருக்கும் சமூகத்திலே, ஓய்வு கிடைத்துப் பயனில்லை. பொருளும் இல்லை. வேகாத பண்டத்தை வெள்ளித் தட்டிலே வைத்துத் தரும் வீண் வேலையாகும்.

நம்நாடு பட்டிக்காடுகள் அதிகமாக உள்ள இடம். பட்டிக்காடுகளோ உழவர்கள் வாழுமிடம். உழவர்களுக்கு ஆண்டிலே மூன்று மாதத்திற்காவது வேலை இருப்பதில்லை ஓய்வுதான்--இந்தச் சமயத்திலே அவர்கள் வீணாகப் பொழுதை ஓட்டுகிறார்கள். நேரம் வீணாகிப் போகிறது--