பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


என்று கூறி உழவும் தொழிலுக்கான நேரம் போக மிச்சமிருக்கும் ஓய்வு நேரத்தை, உழவர்கள் பலன் தரும் பொழுது போக்குக்கும் செலவிடவேண்டும் உதாரணமாக அவர்கள் தேனீ வளர்க்கலாம்; கோழி வளர்க்கலாம்; கூடை முடையலாம், நூல் நூற்கலாம்--சிறு சிறுகுடிசைத் தொழில் செய்யலாம்; ஓய்வு வீண் போகாது, பலனும் கிடைக்கும். வருமானமும் உண்டு என்று கூறாத நிபுணர் கிடையாது உழவர்களுக்காக இந்த யோசனை கூறப்பட்டாலும் சரி, பொதுவாக எல்லோருக்குமே சொல்வதானாலும் சரி, ஒய்வு நேரத்தைப் பணமாக்கும் வழிகளாக்கும்போது சிக்கல் நிச்சயம் ஏற்பட்டுத்தீரும். செலவிடும் நேரம், செலவிடும் உழைப்பு. இவைகளுக்கு ஏற்ற பணம் பலனாகக் கிடைக்கிறதா என்ற கேள்வி நாளா வட்டத்திலே கிளம்பித் தீரும். கிளம்பும்போது வாழ்க்கையிலே குளிர்ச்சி அதிகமாக உள்ளவர் பொழுதுபோக்குத் தொழிலிலே கிடைக்கும் ஒரு அணாவைக் கொண்டு அடையும் களிப்பு அதிகமாகத்தான் இருக்கும்--கலெக்டர் பங்களாத் தோட்டத்துக் கலாப்பழம். காலை முதல் மாலை வரையில் கழணியில் பாடுபட்டும் கால் வயிற்றுக்கும் கட்டிவரவில்லையே என்று கதறும் கந்தன் ஓய்வு வேலையில் உழைத்துப் பெறும் பலாப்பழத்தைவிட அதிக இனிப்புதான் அதிக களிப்பு தான் கிடைக்கும்.

ஓய்வு என்ற பெயரால் புதிய உழைப்பு--அந்த உழைப்பின் மூலம் கிடைக்கும் வருவாய் வாழ்க்கைச் செலவிற்கு பயன்பட வேண்டும், என்ற நிர்பந்தம் இருந்துவிட்டால் அது, ஓய்வுமல்ல பொழுதுபோக்கு மாகாது. எனவே கிராம மக்களுக்காகக் கூறப்படும் யோசனைகள். ஒய்வையும் உழவனுக்குப் புதிய எஜமானாக்கி விடுகிறது, நண்பனாக்கவில்லை.

ஓய்வு--உயர்ந்த பண்புள்ள நண்பன் மூலம் நாம் என்ன பெறமுடியுமோ அவ்விதமான மனமகிழ்ச்சியைத் தருவதாக அமைத்துக் கொள்ளவேண்டும், அது இன்றுள்ள சமூக. பொருளாதார அமைப்பு முறையில், சாத்தியமாகுமா என்பது மிகமிகச் சந்தேகம்.