பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


மாய்த்திடும் நஞ்சு அல்ல--மாண்புகளை மாய்க்கும் நச்சுப் பூச்சிகளை அழித்திடும் முறை!

அறிவு வளர்ச்சிக்கு நாடகம் பயன்படவேண்டும். இதை மறுமலர்ச்சி இயக்கம் மறுக்கவில்லை--அறிவு வளர வேண்டும் என்பது சரி--ஆனால் எத்தகை அறிவு? என்ற கேள்வியைக் கேட்கிறது, மறுமலர்ச்சி இயக்கம்! லோகம் மாயை காயம் என்பது அநித்தியம்--இது ஒருவித அறிவு தான்! சேலைகட்டிய மாதரை நம்பாதே!--இதுகூட ஒருவகையான அறிவுதான். ரெண்டு பிள்ளைகள் இரவல்; உன்னைப் பெற்றெடுத்த தாய்மாரும் இரவல். இதுவும் அறிவிலே ஒருவகை தான்! நாடக மேடை மூலம் எத்தகைய அறிவு பெறுவது! கீழே ஏழு, மேலே ஏழு எனப் பதினான்கு லோகங்கள் கொண்டது பழங்கால பூகோள அறிவு! இதையா, நாடகம் தரவேண்டும், அட்லாஸ் பிரசுரமான பிறகும்! தேரை ஓட்டிக்கொண்டு வரும் சூரிய பகவானையா நாடக மேடையில் காண்பது. விஞ்ஞான வகுப்பிலே சூரியனைப் பற்றிய பாடம் கேட்ட பிறகும், அறிவு தேவைதான்! அறிவு வளரச் செய்வது; நாடக நோக்கத்திலே ஒன்று தான்--மறுமலர்ச்சி இயக்கத்தினர் இதை மறக்கவில்லை. ஆனால், நாடகத்தை அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் போது, எவ்விதமான அறிவு இப்போது மக்களுக்குத் தேவை என்பதைக் கண்டறிந்து, அவ்விதமான அறிவு கிடைக்கும் விதமான கருத்துரைக்கும், காட்சி அமைப்புக்களும் கொண்ட நாடகங்களை நடத்தவேண்டும் என்று கூறுகின்றனர்.

மறுமலர்ச்சிக்கான முயற்சி துவக்கப்படு முன்பு வரை நாடக மூலம்; நாட்டவர் மனதிலே புகுத்தப்பட்ட கருத்துகள் பலதிறப்பட்டன என்ற போதிலும், அவைகளை எல்லாம் பிரித்துத் தொகுத்து, ஜலித்து எடுத்தால், மூன்று முக்கியமான கருத்துக்களையே தந்திருக்கின்றன என்பதை அறியலாம்.

அதாவது; விதி; மேல் உலக யாழ்வு; குலத்துக்கோர் நீதி. மக்களின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும். சந்தோஷத்துக்கும் சஞ்சலத்துக்கும், பிறப்புக்கும் இறப்புக்கும், செல்வ வாழ்வுக்கும் வறுமையால் செல்லரித்துப்போன வாழ்வுக்-