பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39


இந்தச் சமுதாயம் கலனான கட்டடம் என்பதை மறுப்பவர் இல்லை புதுப்பிக்க வேண்டும் என்று பேசாத அறிவாளர்கள் இல்லை எனினும்; சமுதாய நிலைமைகளை, ஜாதி உயர்வு தாழ்வுகளை. அதனால் நிகழும் விபரீதங்களை விளக்கும் நாடகங்களை, ஜாதித்துவேஷ, வகுப்புத்துவேஷ மூட்டுகின்றன என்று கூறி ஒரு மூட நம்பிக்கையினால் விளையும் கேடுகளையும், புரட்டர்களால் பாமரர் அடையும் அவதிகளையும் விளக்கி புத்தறிவு பரப்புவதற்காக நாடகங்கள் நடத்தினால் அவை மூலம் நாத்தீகம் பரவுகிறது என்று சொல்லவும், பயங்கரமான பொருளாதார பேதத்தால், சமுதாய அடிப்படையிலே பிளவு ஏற்படுகிறது. வாழ்வு என்பது அனைவருக்கும் உள்ள உரிமை. இதைப் பறிக்கும் முறையில் உள்ள அமைப்புக்கள் அழிக்கப்பட வேண்டியன என்பதை விளக்கும் நாடகம் நடத்தினால் இது பொது உடைமைப் பூதத்துக்குச் செய்யும் பூஜை என்று கூறவும் இந்த நாட்டிலே, இந்தநாளிலே சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் மூலம், நாடகத்துறை மறுமலர்ச்சிக்குக் குந்தகம் ஏற்படுகிறது.

வகுப்புவாதம், நாத்தீகம், பொதுவுடமைப், புரட்சி இவை நாடக மூலம் புகுத்தப்பட்டுவிடும் என்று பயப்படுவது அறியாமை. உண்மையாகவே அந்தப் பயம் மறுமலச்சி இயக்கத்தின் எதிரிகளுக்கு இருக்குமானால், வகுப்பு அநீதிகளும், வகுப்பு பேதங்களும் நிச்சயம் ஒழியும்; கள்ளிகாளான் அழியும்; நஷ்டமா அது? மூடத்தனம் முறியடிக்கப்படும் மூலமா அதனால் முறிந்து போகும்! எல்லோரும் இன்பம் எய்திடும் வழி கிடைக்கும். பொருளாதாரத் துறையில் இது போற்றத் தக்கதுதானே! இந்த விளக்கமும் நெஞ்சு உரமும் கொண்டு, நாடகத்துறையில் உருவாகிக் கொண்டிருக்கும் மறுமலர்ச்சியை ஆதரித்து ஊக்கமளிக்க வேண்டும் ஊராள்பவர்கள். கருத்திலே தெளிவற்றவர்கள் கலக மூட்டுவது போல. நாடகத்துறையிலே பூத்துள்ள மறுமலர்ச்கி, ஒழுக்கக்கேட்டை உண்டாக்காது. ஒழுக்கம் என்பது எது என்பதை விளக்கமாக்கிவிட்டு, ஒழுக்கத்தை வளர்த்துச் செல்லும், நீதி நேர்மையை அழிக்காது நீதி எது என்று கண்டறிந்து நிலை நாட்டும்!