பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43


நாடு புதுக்கோலம் கோள்வது என்றே கருதுகிறான் உண்மையும் அதுதான்.

"ஏன் இவ்வளவு வறுமை?"--கேள்வி.

"என்ன செய்யலாம்: அடிமை நாட்டில் இருக்கிறோம்" இதுதான் பதில்.

"ஏன் தற்குறித்தனம் தலைவிரித்தாடுகிறது?"

"அடிமைத்தனம், அன்னியராட்சி"

தொழில் வனராத காரணம்?--கேள்வி.

கூட்டிவிட்ட பறவை, பறக்குமா?--பதில்

இங்ஙனம் நாட்டிலே காணப்படும் நானாவிதமான கோணல்களுக்கும் ஒரே காரணத்தைக் காட்டி, இவ்வளவும் போக ஒரே ஒரு மருந்து உண்டு. அதுவே சுதந்தரம் என்று பன்னிப் பன்னிக் கூறப்பட்டது. வாலிபர்கள் சொக்கினர்; அந்த இன்பத்தை எண்ணி உழைத்தனர் இன்பம் காண்--ஊராருக்கும். உரைத்தனர் சுதந்திர இந்தியாவிலே

சுகம் பிறக்கும்;
அறிவு வளரும்;
ஆளடிமையாதல் ஒழியும்;
செல்வம் கொழிக்கும்;
என்றெல்லாம்.

இத்தகைய சித்திரம்,சுதந்திர இந்தியா என்பதறிந்து வாலிபர்கள். அதனைத் திட்டத் தயாராக வேண்டும்.

சுதந்திரமடைந்து நாடு, நெடுங்காலத்துக்கு முன்பு, ஏதேதோ வர்ணங்கள் கொண்டு தீட்டப்பட்டு, காலத்தால் மங்கி, உருவம் அழிந்து, வர்ணங்கள் குழைத்தும் கலைந்தும் போய், அவ்வப்போது திருத்தப்பட்டவைகளும் தேய்ந்துபோன திரைபோலிருக்கும். துவக்கத்தில் நாலாந்தர ஐந்தாந்தர நாடகக் கம்பெனிகளிலே காணலாம். அதுபோன்ற திறைகளை.

நெடுங்காலம் அடிமைப் பிடியிலிருந்து விடுபட்டுச் சுதந்தரம் அடைந்த எந்த நாடும், அந்தத் திரைப்போலத் தான் இருக்கும். அது போதும் என்று திருப்திப்பட்டால்