பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87


தங்களின் வாழ்க்கை முறையும் தொழில் முறையும் தங்களுக்குள்ள வாழ்க்கை வசதிக் குறைவுகளும், எல்லாத் தொழிலாளருக்கும் ஒரே விதமானதாக இருக்கக் கண்டு அனைவருக்கும் உள்ளது ஒரேவகை வியாதி என்று தெரிவதால், அனைவரும் ஒரே வகை மருந்து தேடவேண்டும் என்று முடிவு செய்து, ஸ்தாபணங்களை ஏற்படுத்தினர். இந்தப் பொதுத் தன்மை கெடாதிருக்குமட்டும், ஸ்தாபனம் அவசியமானது என்பது மட்டுமல்ல, பயனுள்ளதுமாகும். எனவே, ஸ்தாபன ஐக்கியம். இந்தப் பொது உணர்ச்சிமெடாதபடி பாதுகாத்துக் கொண்டால்தான் முடியும். கந்தன் முருகனுக்கும் சேர்த்துத்தான் நியாமம் கோருகிறான். முத்தன் மூவருக்கும் சேர்த்தே நீதி கேட்கிறான். ஒவ்வொருவரும் மற்ற யாவருக்கும் சேர்த்தே நீதி நியாயம் கேட்கிறார்கள். ஸ்தாபனத்தின் சணம் இதைப் பொறுத்தே இருக்கிறது. ஸ்தாபனத்தின் மூலம் அதைச் சேர்ந்தவர் அனைவருக்கும் நலன் கிடைக்கிறது என்பது விளக்கமானால்தான், ஸ்தாபனத்திலே ஐக்கிய உணர்ச்சி இருக்க முடியும்--கந்தனுக்குத் தெரியாமல் முருகனும், முருகன் அறியாவண்ணம் முத்தனும், தனித் தனியே நடவடிக்கையை எடுத்தால். ஸ்தாபனம் உடைந்து படும். பொதுத் தன்மைத்தான் ஸ்தாபனத்துக்கு அரண்.


இந்தப் பொதுத்தன்மை பலமாக இருக்கவேண்டுமானால், ஸ்தாபனம், மிகமிக நியாயமான கொள்கைகளின் மீது கட்டப்படவேண்டும்.

குடும்பம் முதற்கொண்டு கோலோச்சும் சர்க்கார் வரையிலே ஸ்தாபனங்கள் தான்--ஒருவகைப் பொதுத் தன்மை--பொதுவான பணிகள்-- அனைவரையும் கட்டுப்படுத்தும் பொதுவான பொறுப்புக்கள், பலன்கள் இவைகளில் உண்டு. இதிலே எது கெடினும், ஸ்தாபனத்தின் ஐக்கியம் நிச்சய-