பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் எண்ணரிய பிறவிகளுள் ஏற்றமுடையது மானுடப் பிறவியே. இம்மானுடப் பிறவி மற்றைய பிறவிகள் அனைத்திலும்-தெய்வப் பிறவி உட்பட-மேம்பட்ட ஒன்று என்பதைத் தமிழ் இலக்கியங்களும் இலக்கணங்களும் நன்கு விளக்குகின்றன. அத்தகைய மனிதப் பிறவியில் பெரியோர் எனப்படுபவர் உலக அனுபவம் நிறைந்தவர்ளே ஆவர். ஒருவனை முழு மனிதனாக்குவது அவனுடைய ஆழ்ந்த அனுபவ முதிர்ச்சியேயாகும். உலகில் உள்ள உயிரினசமுதாய வாழ்வில் பெறும் அனுபவம் மிகப்பெரியது. அதனால்தான் கடவுளர்கூடச் சில வேளைகளில்-தீமை நீக்கி நன்மை பயக்கும் நிலைகளில் மனித உரு எய்துகின்றனர், கம்பன் வேறுள குழுவை யெல்லாம் மானுடம் வென்ற தன்றே என அதன் சிறப்பினைப் பாராட்டுவான். இந்த அனுபவம் வாய்ந்த மனிதரை வள்ளுவர் 'அறனறிந்த மூத்த அறிவுடையார் (44l) என்கின்றார். உலக வாழ்க்கையில் பட்டறிவு பெற்று, பலவகையில் பெற்ற அனுபவத்தால் தெளிந்த அறிவுடையராகி அறவழியில் நிற்பவர் மூத்தவராவர். வயதில் மூத்தவர்கள் இந்த உலக அறிவு பெறுதல் கல்வி கற்றலினும் மேம்பட்டது என் 0 உண்மையினை உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார், பல கற்றும், அறிவிலாதார் (140) என்று இல்லற இயலில் ஒழுக்க முடைமையின் இறுதியாக விளக்குகிறார் வள்ளுவர். உலகில் குடும்பத்தொடு ஒன்றி வாழ்ந்து உலக அறிவினைப் பெற்று, நலம் தீங்குகளில் பட்டு உழன்று பண்பட்ட பெரியவர்களைத் தான் மூத்தோர்’ என்றும் பெரியவர் என்றும் உலகம் «Ғт–— 1