பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சான்றோர் வாக்கு கூறுகின்றது. இவர்தம் வாக்கினை அமிர்தமாகப் போற்றி அவர்வழி ஒழுக வேண்டும் என்பதை ஒளவையார் மூத்தோர். சொல் வார்த்தை அமிர்தம் எனக் காட்டிவிட்டார். எனவே இத்தகைய மூத்தோர் துணை கொண்டு வாழும் யாரும்எந்தச் சமுதாயமும் சிறக்க வாழும் என்பது உறுதி. வள்ளுவர் இதை விளக்கவே பெரியாரைத் துணைக்கோடல் (அரசியல்) 'பெரியாரைப் பிழையாமை (அங்கவியல்) என இரண்டு அதிகாரங்களை அமைத்துள்ளார். இளையவர்கள் முதலில் தம் பெற்றோராகிய தாய் தந்தையரைப் போற்றி, அவர் சொற்படி நடக்க வேண்டும். ஒளவையார் அவர்களையே முதல் தெய்வமாகக் காட்டி, பின் இறைவன் கோயிலைச் சுட்டுகிறார். 'அன்னையும் பிதாவும் முன்அறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று' எனக் காட்டுவர். மேலும் அவரே தந்தை தாய்ப்பேண் என்றும் 'தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றும் கூறுவார். எனவே முதலில் முதிர்ந்தவராகிய பெற்றோரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பின் மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்றதனால் பிற பெரியோர்களை-வயதில் மூத்தோர் களை-உலக வாழ்வில் உழன்று அனுபவம் பெற்றவர்களை மதித்து, அவர்தம் வார்த்தையினை அமிர்தமெனப் போற்றிப் பின்பற்ற வேண்டும். இன்றைய உலகம் இந்த வகையில் மூத்தோரைப் பின்பற்றாத காரணத்தினால்தான், உலகில் பல சிக்கல்களும் வீடுதொறும் பூசல்களும் போராட்டங்களும் நிகழ்கின்றன. நாடும் ஊரும் உலகும் அமைதியாக வாழ வேண்டுமானால் மூத்தோர் சொல் கேட்டு அதன்படி நடக்க வேண்டும். அதிலும் சிறப்பாக நாடாளும் நல்லவர்கள் இதனைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே பெரி