பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் 1 ; யாரைத் துணைக்கோடல்' என்ற அதிகாரத்தை அரசியலில் வைத்தார். அரசியலில் உள்ளதால் மற்றவர்களுக்கு இல்லை என்பது இல்லை. சிறப்பாக உள்ள நிலையை முன்கூறி, அதன்வழி உலகில் வாழ் மக்கள் அனைவருக்குமே வள்ளுவர் இந்த நெறியினைக் கையாளுவர். கல்வி அரசியலில் உள்ளது' எனவே அரசர் தவிர மற்றவர் படிக்க வேண்டாம் என்று யாராவது சொல்லுவார்களா! எனவே தம்மிற் பெரியார் தமராய் ஒழுகுதல் வன்மையுள எல்லாம் தலை' (குறள் 444) என்று கூறியபடி பெரியவரைத் தழுவி அவரொடு இயைந்து ஒழுகுதலே வாழ்வாகும் எனத் தெளிதல் வேண்டும். முற்காலத்தில் மூன்று, நான்கு வகுப்புகளில் இருந்த ஒரு பாடம் நினைவுக்கு வருகிறது, ஒருவர். தன் தந்தையைத் தெருத் திண்ணையில் இருக்க வைத்து, அவருக்கு ஒரு திரு ஓடும் கொடுத்து, நாள் தோறும் வெறும் கஞ்சியினை ஊற்று வாராம். தானும் தன் மனைவி மக்களும் நன்கு உண்டு மகிழ, பெற்ற தந்தைக்கு இத்தகைய கொடுமையினை நாள் தொறும் செய்து வந்தாராம். பல நாட்களாயின. ஒருநாள் அந்த ஒடு காணாமற் போய்விட்டது. தந்தையை அவர் மிகவும் கடிந்து கொண்டு, அன்று கஞ்சியும் கிடையாது என்று கூறிவிட்டாராம். உடனே அவர் பக்கத்தில் இருந்த அவர் மகன் வந்து 'அப்பா அந்த ஒட்டினை நான்தான் எடுத்து வைத்திருக்கிறேன். உனக்கு வயதான பிறகு நான் இவ்வாறு உனக்குக் கஞ்சி. ஊற்ற வேண்டுமல்லவா! அதற்காகவே எடுத்து வைத்திருக்கிறேன்’ என்றானாம். கேட்ட அவன் தந்தை திடுக்கிட்டான். வருங்காலத் தன் நிலையை உணர்ந்தான்; வருந்தினான். பிள்ளையின் உபதேசம் அவனைத் திருத்தியது. அப்பாவை வீட்டுக்குள் அழைத்து பிறரைப் போலவே அவரையும் வாழ வைத்தானாம். இப்படி நீதி பொதிந்த பாடங்களையெல்லாம் ஏழு எட்டு வயது நிரம்பிய பிள்ளை உள்ளங்களில் பதிய அன்று பாட