பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சான்றோர் வாக்கு நூல்கள் எழுதினார்கள். இன்று இப்படி இல்லையே. எதை எதையோ பற்றி எழுதி-நீதி இன்னதென அறியா வகையில் கல்வி செல்ல, அவற்றைப் படிக்கும் பிள்ளைகள் பின் எப்படிப் பெரியவர்களை மதிப்பர்? வளர்ந்தபின் மாணவர்-பிள்ளை கள்-மனம் மாறுகிறார்கள், போதைக்கும் பேதையா கிறார்கள் என்று அரசாங்கமும் பெற்றோரும் அவலக்குரல் எழுப்பினால் பயன் என்ன? 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்ற ஒளவை நீதியே அரசாங்கப் பாட நூல்களில் ஒருகால் அகற்றப்பட்டதே-பின் வாழ்வது எங்கனம்? நம்நாட்டில் மட்டுமன்றி உலகெங்கிலும் மூத்தோர் அல்லது பெற்றோருடன் கலந்து வாழும் சமுதாய நிலை, மாறியே உள்ளது. பெற்ற தாயும் தந்தையும் தனித்து வாழும் நிலையே பெரும்பாலும் காணப் பெறுகின்றது. பெற்றோரும் மற்றைய பெரியோரும் கூறும் அறிவுரைகளைக் கேட்டு, அவற்றின் வழி நடக்கும் பிள்ளைகள் அருகியே வருகின்றனர். சமுதாயப் பிணைப்பு அல்லது குடும்பப் பிணைப்பு என்பது வெறும் சொல்லளவிலே நிற்கும் நிலை உருவாகி வருகின்றது. இதனாலேயே உலகில் முதிர்ந்தோர் தங்குவதற்கெனத் தனித்தனி இல்லங்கள் பல இடங்களில் அமைக்கப் பெறுகின்றன. பிள்ளைகளிடமோ பிற இளைஞர் களிடமோ இருந்து அவல வாழ்வு வாழ்வதைக் காட்டிலும் வசதிகள் அளவறுக்கப் பெற்றதாயினும் முதியோர் இல்லங் களில் அமைதியாக வாழவே பல பெற்றோர்கள் நினைக் கின்றனர். தாய் தந்தை அற்று, வாழ வழியற்ற குழந்தை களுக்கு அனாதை இல்லங்கள் அமைவன போன்று, ஊர் தொறும் முதியோர் இல்லங்கள் தோன்றுகின்றன. பொதுத் தொண்டு நிறுவனங்களும் அரசாங்கமும் இந்த வகையில் அண்மையில் கருத்திருத்திச் செயலாற்றத் தொடங்கி இருப்பது வயது வந்தோருக்கு ஆறுதலாக உள்ளது. மக்கள் வாழ்க்கை சராசரி வயது வளர வளர (இன்று. 62 என்