பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111


சிறுக்ாலையே செய்க 1 11 ன்ன்ற வினாவிற்கு, பின்னால் அங்கவியலில் பதில் சொல்லு கிறார். அப்புல்லறிவாளன் அவன் வாழும் வரையில் அவ்னுக்கும்-ஏன்?-சமுதாயத்துக்கும் ஒரு நோயாக இருப்ப தோடு, அல்கையாய் ஆடும் நிலையையும் சுட்டுகிறார். அறிவே இல்லாதவன் எத்தனையோ வகையில் மேம்பட்ட வன்; ஆனால் இந்தப் புல்லறிவாளனோ தானும் வாழ்வில் ஏமாந்து உலக்ையும் ஏமாற்றுவான். அதனால்தான் குறள், நாலடி இரண்டும் இப்புல்லறி வாண்மையைச் சுட்டி உலகைத் திருத்த நினைக்கின்றன. - - வருமுன் காக்கும் திறமே சிறந்தது; போற்றப் பெறுவது. பெறுதற்கரிய மக்கட்பிறவி பெற்று, உயிர் வளர்ச்சியில் உச்சத்தில் நிற்கும் மனிதன் சமுதாயத்துக்கும் தனக்கும் ஆற்ற வேண்டியவற்றை எண்ண வேண்டும். உலகவாழ்வு செம்மையாக வழிகாட்டுவது அறிஞர் செயல். அதற்குத் தனி மனிதவாழ்வு செம்மையுற வேண்டும். அந்தச் செம்மை நலம் நாடி, வாய்ப்பு உள்ள போதே நல்ல செயல்களைச் செய்தல் அறிவுடைமை-இன்றேல்? - உயிர்ப்பயணம் நீண்டது. அப்பயண வழியில் உணவு விடுதிகள் கிடையா. எனவே முன் எச்சரிக்கையாக, பயணத் துக்குத் தேவையான உணவைச் சேகரித்துத் தோளில் சுமந்து செல்ல வேண்டும். இதைப் பொதி சோறு என்பர்-ஆம்! வருங்காலத்துக்குப் பொதிந்து வைப்பது இந்த ஏற்பாடு. இன்றேல் வழியிடை ஏமாற வேண்டியிருக்கும். ஆம்! உரிய காலத்தில்-இளமையில்-வருங்கால வாழ்வுக்குரிய பொதியி னைக் கட்டி வைக்காவிட்டால் பின் விளைவு வேதனை யாகும். மறுமையில் நம்பிக்கை உடையார் அம்மறுமைக்கு வேண்டிய பொதியினைச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். இந்த உண்மைகளை உணராத புல்லறிவினார் வாடிவருந்த நிற்கும் நிலையினை நாலடியார் எண்ணிப் பார்க்கின்றது.