பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

சான்றோர் வாக்கு


110 சான்றோர் வாக்கு கிறது. அப்படியே பல ஆக்க வேலைகளைச் செய்யத் தனி மனிதரும் சமுதாயமும் அரசாங்கமும் முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும், நாம் எடுக்கின்ற முயற்சியினை ஒட்டியே நம்நாட்டு விளை வளம், வாணிப வளம் பிற வளங்கள் அனைத்தும் வளரும்; சிறக்கும். இன்றி நாம் வாளா இருப் போமாயின்-நாட்டின்மேல் குறை கூறிக்கொண்டே குமைந் திருப்போமாயின்-நாம் ஆழ்வோம் என்பது உறுதி. நாடு வாழ்வதும் வீழ்வதும் நம்மாலே-நம் செயலாலே-நம் முயற்சியின் அளவாலே என்று உணர்ந்து செயல்பட்வேண்டும். இந்த உண்மையினைத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு அறிவுறுத்திச் சென்றார் ஒளவையார். அவர் பாடலில் ஆடவர் எனக் குறிப்பினும் அத்தொடர் அவருடன் இணைந்த பெண்டிரையும் குறிக்கும் என உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும். இதுவரையில் மறந்தது போதும். இனியாவது ஒன்றிச் செயலாற்றுவோம் என்று வேண்டி, அவர்தம் புறநானூற்று அடிகளை உங்கள் முன் வைக்கிறேன். - 'நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் - - அவ்வழி நல்லை வாழிய நிலனே' (புறம் 187) சிறுகாலையே செய்க 'அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்றார் வள்ளுவர். ஆம் அறிவு ஒன்றே மனிதனை மனிதனாக வாழவைப்பது; சமுதாய வாழ்வை அளிப்பது. வள்ளுவர் இத்தகைய மேலான அறிவுடைமையைக் கல்வி, கேள்விகளுக்கு அடுத்து அரசியலில் அமைத்துள்ளார். ஆனால் அற்ப அறிவு உடையவர்கள் உலகத்தில் வாழ்கின்றார்களே-அவர்களை எங்கே சேர்ப்பது