பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109


முயற்சி ஆக்கம் தரும் 109 உணர்ந்தால் உடனே செயல்படத் தோன்றுமல்லவா! அச்செயலே நாட்டை உயர்த்தி வாழவைக்கும் என்பது உறுதி! இன்று உலகின் பல பாகங்களிலும்-ஏன்?-நம் நாட்டிலும் எத்தகையோ மேடுபள்ளங்கள் சமமாக்கப் பெற்று விளை நிலங்களாக மாற்றப் பெற்றுள்ளமையைக் காண்கிறோம், காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கி வற்றாவகையில் உணவுப் பொருள்களை உற் பத்தி செய்வதை அறிகிறோம். எனினும் இன்னும் மக்களுக்கு உணவுப் பற்றாக்குறையாக இருப்பதற்கு நாட்டுமக்கள் உழைக்க வேண்டிய அளவுக்கு உழைக்கவில்லை என்பதையே காட்டுகின்றது. எத்தகைய நிலமாயினும் மனிதனுடைய கையால் செயல்படுநிலையில் இயங்குமாயின் அது திருந்திய நிலமாகும். கிராமங்களில் நிலத்துக்குச் செய்நேர்த்தி' செய்யப்பெற வேண்டுவதாக அம்மக்கள் பேசிக் கொள்வதை அறிவோர் மிகச் சிலரே. மக்கள் செய்நேர்த்தி நன்றாக அமையின் நன்செய்’யாகவும் குறை புன்செய்’யாகவும் அமைய, மற்றவை காடு கரம்பாக வீணாக உள்ளதை அறிவோம். நாட்டில் புன்செய் நன்செய்யாக வேண்டும். காடு கரம்புகள் திருத்தப் பெற்று விளை நிலங்களாக வேண்டும். வேறு பலவளங்களும் பெருக வேண்டும். ஒன்றும் இல்லையென்று சோம்பி இராது உற்ற நிலத்தில் கைவருந்திப் பாடுபட்டால் பயனுண்டு. இன்றேல் இகழ்ச்சி தான் மிஞ்சும். இதையே வள்ளுவர், இலமென்றசைஇ, இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும் எனக் காட்டுகிறார். எனவே எங்கள் நாட்டில் வளமில்லைவரண்டநிலம்-வரட்டு ஆறு, வழி இல்லை' என்று வாளா இராது கங்கையைக் காவிரியோடு இணைக்க வழிகாண வேண்டும். முயற்சி நடைபெறுகின்றதறிந்து மகிழ்ச்சி உண்டா