பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

சான்றோர் வாக்கு


108 - சான்றோர் வாக்கு 'நல்லது செய்தல் ஆற்றிராயினும் அல்லது செய்தல் ஒம்புமின்; அதுதான் எல்லாரும் உவப்ப தன்றியும் • கல்லாற்றுப் படுஉம் நெறிவுமாறதுவே (புறம் 195) முயற்சி ஆக்கம் தரும் நம் பாரத நாடு உரிமை பெற்றபின் எவ்வளவோ வகையில் நாம் முன்னேறியுள்ளோம். எனினும் மக்கள் மன நிறைவும் வாழ்வின் அடிப்படைத் தேவையும் முற்றப்பெற்று வாழவில்லை என்பது கண்கூடு. இதற்குக் காரணம் என்ன? காரணம் நாமே என்பது எண்ணிப் பார்த்தால் விளங்கும். மனிதன் முன்னேற உழைப்பு இன்றியமையாத தாகின்றது. இன்று நாட்டில் உழைக்க வேண்டும் என்ற மனப் பான்மை அருகி வருகின்றது. கொடிய பாலைவனங்களை யெல்லாம் சோலைவனங்களாக்கிப் பயிரிட்டுப் பயன் காணும் நாடுகள் பற்றி நாம் கண்டும் கேட்டும் மகிழும் அதே வேளை யில் நாமும் அவ்வாறு செய்து நம்நாட்டை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற உணர்வில் செயல்படத் தயங்கு கிறோம். - நாடு காடாக இருக்கலாம்; மலையாக இருக்கலாம், மேடாக இருக்கலாம்; பள்ளமாக இருக்கலாம். ஆனால் அவற்றைத் திருத்தி, மக்கள் வாழிடமாகவும் மக்கள் வாழ்வுக் கேற்ற உணவுகள் விளை நிலமாகவும் அகழ்ந்து பிறபொருள் காணும் அருநிலமாகவும் நம் உழைப்பாலன்றோ அதை மாற்ற முடியும். நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும், தம் நாடு வாழ -சமுதாயம் வாழ, உயிர் வாழ, தனக்கு உற்ற வகையில் உழைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையை