பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107


அல்லது செய்தல் ஒம்புமின் ‘107 அவர்கள் கெடுவது மட்டுமன்றி, அவர்களால் உலகமும் சமுதாயமும் கெடுகிறது. இவற்றையெல்லாம் எண்ணித்தான் போலும் சங்க காலத்தில் வாழ்ந்த நரிவெரூஉத்தலையார் என்ற ஒருநல்ல புலவர் மனிதனுக்கு உயர்ந்த ஒரு உபதேசத் தைச் செய்கிறார். அதைப் படித்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் நாம் வேறுவழியிலே சென்று கொண்டிருக் கிறோம். சற்றே நின்று நினைத்துப் பார்ப்போமா! பிறந்தவர் மறைவது உண்டு. வாழ்வது சில நாள். அந்த சிலநாள் வாழ்க்கை அவர்களை உலகில் என்றென்றும் வாழச் செய்ய வழி உண்டா? உண்டு. அதுதான் நரிவெரூஉத் தலையார் காட்டுவது. உலகில் பிறந்த நீ உன்னால் முடிந் தால் நல்லது செய். அதனால் நாடு நலம் பெறும்; சமுதாயம் தழைக்கும். உனக்கும் பயன் உண்டு. ஆனால் அவ்வாறு செய்ய முடியாவிட்டாலோ, முடிந்தும் மனமில்லாக் காரணத் தாலோ, வேறு கொடுமைகளையாவது செய்யாதிருக்கக் கற்றுக் கொள். நல்லது செய்யாவிட்டால் இவன் இருந்தும் செய்யவில்லை என்பதோடு நிற்பார்கள். அன்றி 'அல்லது' செய்தால் உலகில் உனக்கு என்றென்றும் பழி உண்டா வதோடு, மறுமையிலும் உன் வாழ்வு சிறக்காது என்கிறார். ஆம்! நல்லது செய்ய முடியாதவர்கள் சும்மா இருந்தாலே போதும். அதுவே அவர்களுக்குப் புகழ். மாறாகக் கொடுமை செய்து இம்மையிலும் மறுமையிலும் அமைந்துள்ள-அமைய வேண்டிய-நல்வாழ்வை நாசமாக்கிக் கொள்ளலாமா? இதில் சுயநலமும் உள்ளதே தாம் வாழ விரும்பின்-இம்மை மறுமை இரண்டிலும் இன்பம் பெற வேண்டின், அவர் சொல்லைக் கடைப்பிடித்து நல்லது செய்யாவிட்டாலும் அல்லது செய்யாது அவரை வாழ வைப்போமாக இதோ அவர் வாக்கு: - - -