பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

சான்றோர் வாக்கு


106 - சான்றோர் வாக்கு வனுடைய இரண்டு கண்களும் கெடவேண்டும் என்று பிறர்க்குத் தீமை இழைப்பதிலேயே இன்பங்காணுவதையும் அறிகிறோம் இந்த அவல நிலை மனிதனிடத்து அம்மனித உணர்வு அற்றதனாலே உண்டான ஒன்றாகும். இதற்கு மாற்று இல்லையா? மருந்து இல்லையா? 'அரிதரிது மானுடராத லரிது’ என்ற ஒளவையின் மொழிப்படி, உயிரினத்தின் உச்சியிலே வாழ்கின்ற மனிதன் ஒரு சமுதாய விலங்கு என்ற உணர்வினைப் பெறுவதோடு, அச்சமுதாயம் வாழ்ந்தால்தான் தனி வாழ்வும் சிறக்கும் என்ற உண்மையினையும் தெரிந்து கொள்ள வேண்டும்; உலக வரலாற்றில் சிற்சில சமயங்களில் தனிப்பட்டவர்தம் வாழ் வினை வளம்படுத்துவது உயர்ந்ததாகக் கருதப்படும் நிலைகள் தோன்றினும் அவை அனைத்தும் காலத் தேவனால் கட்டறுக்கப் பெற்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். 'நாடு வாழ்ந்தால்தான் நாம் வாழ்வோம்’ என்ற உண்மை நிலையே யாண்டும் என்றும் ஒம்பப் பெறல் வேண்டும். வாழ்வில் சிலருக்கு உதவத்தக்க வாய்ப்பும் வசதியும் இருக்கும்; சிலருக்கு அது இராது. இராதவர் தமக்கு அந்த வசதி இல்லையே என்பதற்காக மற்றவர்களுக்குக் கெடுதி செய்ய வேண்டும் என்பதில்லை. அன்றி, அந்த வசதி பெறு வதற்காக மற்றவர்களைக் கெடுக்க வேண்டும் என்பதில்லை. வசதி இருந்தால் நலம்பெறலாம். இன்றேல் அமைதியாக வாவது இருக்கக் கூடாதா மேலும் சில வசதி படைத்தவர்கள் தம்மிடம் பணம், பதவி, பட்டம் இன்னபிற இருக்கின்ற காரணத்துக்காக, மற்றவரைச் சாடுவதும் தாழ்த்துவதும் செய் வதையும் நாம் காண்கிறோம். இது மிகக் கொடுமை வாய்ந்த தாகும். இவர்கள் இம்மையில் மட்டுமன்றி மறுமையிலும் நலம் காண மாட்டார்கள். அவ்வாறு வசதியால் பிறரை வாட்டி வதைத்தவர் வரலாறுகள் முடிவில் எவ்வாறு அமை கின்றன என்பதை உலகம் கண்டு கொண்டே இருக்கிறது.