பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105


அல்லது செய்தல் ஒம்புமின் ió5 உற்றாராய் வாழும் வாழ்வினைப் போற்றிப் பின்பற்றும் நல்லவரால் நிறையப் பெறுமாயின் பிறகு உலகுக்குக் குறைவேது; கொடுமையேது? எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்று வாழ வழி உண்டாகும்.ல்லவா! ஆம்! அந்த உளம் ஒன்றிய நல்ல சமுதாய வாழ்வு நாட்டிலும் உலகிலும் மலர் வதாக என வாழ்த்தி அப்புறநானூற்று அடிகளை உங்கள் முன் வைக்கிறேன். -- - 'எந்தை வாழி! ஆதனுங்க! என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே கின்யான் மறப்பின் மறங்குங்கொல் என்னுயிர் யாக்கையின் பிரியும் பொழுது என்யான் மறப்பின் மறக்குவன்' (புறம் 175) அல்லது செய்தல் ஓம்புமின் . மனிதன் உலகில் வாழப் பிறந்தவன். தான் வாழ்வதோடு மட்டுமன்றி மற்றவர்களையும் மற்றவற்றையும் வாழ வைக்கவும் பிறந்தவன். இந்த அடிப்படை உண்மையினை உணராத காரணத்தினால்தான் மனிதன் ஒன்றை விட்டு ஒன்று பற்றி எங்கெங்கோ சுற்றி, ஏதேதோ செய்து எப்படியோ காலம் கடத்துகின்றான். சிலர் தம் வாழ்வே பெரிதென எண்ணி, அவ்வாழ்வு வளம்பெற எத்தகைய கொடுமையினையும் செய்யத் துணிவர். தான்கெடினும் தக்கார் கேடெண்ணற்க என்ற முதுமொழியை ஏட்டில் விட்டு, நாட்டில் செய்யத் தகாத காரியங்களையெல்லாம் செய்து, தன்வாழ்வைப் பெருக்கிக் கொள்ளுபவர்களை நம் கண்முன்னே காண்கிறோம். சிலர் அதற்கும் ஒருபடி மேலே சென்று, தனக்கு ஒரு கண் கெட்டாலும் பரவாயில்லை; மற்ற ғIт-~7