பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

சான்றோர் வாக்கு


104 சான்றோர் வாக்கு நாட்டுக்கு நாடு-வீட்டுக்கு வீடு மாறுபட்ட வகையில் பகை மூட்டுவதறிகிறோம். இந்த நிலை உள்ள வரையில் முன்னேற் றம் எப்படி உண்டாகும்? கூடிப் பிரியேல் என்று குழந்தை களுக்கு ஒளவையார் கூறிய அந்தப் பொன்மொழி உலகில் வாழும் அனைவருக்கும் பொருந்தும். நண்பரான பின்அன்பால் பிணைப்புண்டபின், ஒவ்வொருவரும் தாம் மற்ற வரோடு கலந்தவர்-உற்றவர் என்ற உணர்வில் வாழ்ந்தால் நாட்டில் இத்தனை நீதி மன்றங்களுக்கும் வேலை இல்லையே! உள்ளத்தில் உற்ற நண்பர் இடம்பெறும் நிலையும், அவர் வாழத் தான் வாழ்வதும் அவர் வாடத் தாம் வாடுவதும் என்ற உணர்வு நிலையும் நாட்டிலும் வீட்டிலும் அமையுமானால் உலகம் ஒரு நல்ல பூஞ்சோலையாகத் திகழாதா! அந்த உளம் ஒன்றிய நல்வாழ்வு உலகில் என்று மலருமோ! யாரறிவார்? இந்த உண்மையினை உணர்ந்த புற நானுாற்றுப் புலவர் கள்ளில் ஆத்திரையனார், தான் அறிந்த அப்பேருண்மை யினை, உலகுக்கு உணர்த்துகிறார். அவர்தம் உற்ற நண்பன் ஆதன் ஊங்கன் என்பவன். ஒருவேளை யாராயினும் நண் பனை மறந்தீரோ? எனக் கேட்டிருக்கலாம். ஆதனுங்கனே கேட்டும் இருக்கலாம். அதற்கு விடையாக எந்தை வாழி! (புறம் 175) என்ற பாட்டால் பதில் சொல்லுகிறார். ஆதன் ஊங்கனை முன்னிறுத்தி, என் நெஞ்சம் திறந்தால் அதில் 'உன்னைக் காணமுடியும். ஆம்! நான் உன்னை மறப்பேன்எப்போது?-என் உயிர் என்னைவிட்டுப் பிரியும்போது நான் என்னை மறப்பேனல்லவா! அப்போது ஒருவேளை உன்னை யும் மறப்பேன் கொல்’ என்கிறார். இதனினும் சிறந்த நட்பு ஏது? அவருடைய 'என் நெஞ்சந்திறப்போர்:நிற்காண்குவரே” என்ற தொடர் ஒரு தலைவனோ அன்றித் தலைவியோ கூறியது போன்று காணப் பெறினும் இணைந்த இரு நல்ல வர்தம் உளத்தையே இது காட்டுகிறது. ஆம்! உலகம் இந்த ஆத்திரையனார் அடிஒற்றி உளத்தால் ஒன்றாக அனைவரும்