பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103


உள்ளத்தால் ஒன்றுக உலகம் கூடி வாழ்வதற்கெனவே அமைந்தது. சமுதாய வாழ்வு இந்த அடிப்படையில் அமைந்துதான் உலகை வாழ்விக் கிறது. மனிதன் மட்டுமன்றிச் சில பறவை இனங்களும் விலங்கு முதலியனவும் எறும்பு, பூச்சி வகைகளும் கலந்து வாழ்கின்றன. ஆயினும் சமுதாய வாழ்வில் திளைக்கும் மனிதனுடைய கூட்டு வாழ்வில் சில வேறுபட்ட உணர்வுகள் மிக்கு வளருவதைக் காண முடிகிறது. ஒட்டும் இரண்டு ளத்தின் தட்டில் அறிந்தேன்' என்று காதல் பற்றிப் பாரதி யார் பாடிய கருத்து உலகில் கூடிவாழும் எந்த உயிருக்கும்எல்லா மனிதருக்கும் பொருந்துவதாகும். ஆயினும் இன்றைய மனிதன் அந்த உள்ள உணர்வோடு பழகவில்லை-வாழ வில்லை என்பதனை உலக, நாட்டு, வீட்டு நிகழ்ச்சிகள் நமக்குக் காட்டுகின்றன. அதனாலேயே வள்ளலார், உள் ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும், என்று பாடிச் சென்றார். ஒருவனை ஒருவன் நம்பினாலன்றி வாழ்வு இல்லை. ஆனால் நம்பக் கூடியவர்களும் நம்பும் வழியில் வாழ்பவர் களும் உள்ளத்தில் நம்பிக்கை வையாது உதட்டளவில் உறவு கொண்டு காலம் வரும்போது ஒருவர் மற்றவரை வீழ்த்தப் பார்க்கும் உலகில் நாம் வாழ்கின்றோம். இதனாலேயே அண்ணன் தம்பியருக்குள் பிணக்கும், வீட்டுக்கு வீடு வேறு பாடும், நாட்டுக்கு நாடு போரும் உண்டாகின்றன. மனிதன் பகுத்தறிவின் திறத்தால் எவ்வளவு முன்னேற்றம் பெற்ற போதிலும், இந்த உறவாடும் மன உணர்வாகிய பண்பு இல்லையானால் நாடும் உலகமும் உண்மையில் முன்னேற முடியாது என்பதை உலக வரலாறு காட்டுகிறது. தனி மனித வாழ்வும் அப்படியே! மாநாடுகளும் கூட்டங்களும் கூடிப் பேசி ஒற்றுமையைப் பற்றிப் பிதற்றிவிட்டு, தனிமையில் ஒருவருக்கொருவர்