பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

சான்றோர் வாக்கு


102 சான்றோர் வாக்கு தானே வந்து சேரும். அறிவும் அடக்கமும் அஞ்சுவது அஞ்சும் நல்லுணர்வும் அமைந்தால் நாட்டிலும் உலகிலும் பல கொடுமைகள் இல்லையாகும் என்பதைப் பல நாட்டு வரலாறு களும் இலக்கியங்களும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன அல்லவோ! இந்த அறிவும் அடக்கமும் நல்லுணர்வும் அமைந்த நல்ல உளமுடையோர் உலகம் விரும்பிய நல்ல காரியங்களைச் செய்வதோடு, உள்ளதைக் கொண்டு மகிழ்ந்து, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற நெறியில் நிற்பர். இவ்வாறு இந்த ஐந்து பண்புகளும் ஒருங்கே அமையின் உலகில் துன்பம் தோன்ற வழி ஏது? யாருக்கும் யாவும் இன்பமாகவே அமையுமன்றோ! இதைத் தான் நாலடியார் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. நாம் முதலில் தீய செறுவார்க்கும் செய்யா அறிவுடைய ராக வேண்டும். அவ்வறிவின் வழி அடக்கம் அமையும்; அஞ்சுவது அஞ்சும் பண்பும் உருவாகும். அவ்வுணர்வு சமூகத்துக்கு இனிமைதரும்-நன்மை விளைக்கும் செயல் களையே செய்ய நம்மைத் துரண்டும். அச்செயல்வழி யினாலும், பெறுவதனால் இன்புற்று வாழும் இயல்பினாலும் நாம் எல்லாரும் இன்பம் பெறுவோம் என்பது உறுதி. நாம் மட்டுமல்ல; நானிலம் முற்றுமே இன்பில் திளைக்கும் என்பது தேற்றம். மனித சமுதாயம் இந்த மாபெரும் செம்மை நெறிகளை முற்றும் உணர்ந்து உலகினை இன்பச் சோலை யாக்கி உயர்வதாக!