பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101


எங்காளும் இன்பமே . 101 கழிவதையும் காண்கிறோம். இருந்தாலும் உலகம் எங்கே இன்பம்? எங்கே இன்பம்? என்று கேட்டுக் கொண்டே எங்கெங்கோ செல்லுகிறது. உற்று நோக்கின் உயிரினம்சிறப்பாக அதன் உச்சியில் வாழும் மனித இனம்-அந்த இன்ப நெறியைப் பெறுவதற்கான அடிப்படை உண்மையினை முற்றும் உணர்ந்து கொள்ளவில்லை என்பது புலனாகும். எனவேதான் நாலடியார் அந்த முற்றிய உண்மையினை நமக்கு உணர்த்துகின்றது, 'அறிவதறிங் தடங்கி அஞ்சுவ தஞ்சி உறுவது உலகுவப்பச் செய்து-பெறுவதனால் இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது’ (பொறையுடைமை-4) என்ற அடிகளில் துன்புறாத நல்வாழ்வு பெற நாலடி நமக்கு வழி காட்டுகிறது, இந்த அடிப்படை உண்மை அனைவருக்கும் ஏற்புடைத்தாகும். உண்மையில் நிலைத்த நல்ல நெறிவழிப் பெருகும் இன்பம் வேண்டுவோர் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஐந்து நல்ல உண்மை களை நாலடி நமக்கு உணர்த்தி அவற்றை மேற்கொள்ளத் துரண்டுகிறது. முதலாவதாக அறிவதை அறியவேண்டும். உலகில் அறியாமையாலேயே பலவகைத் துன்பங்கள் உண்டாகின்றன. எனவே அறிவது அறிந்து என்று வாழ்வின் இன்றியமையாத முதற் கடமை யாக இதை வற்புறுத்துகிறார். யாதும் ஊரே யாவரும் கேளிர்” போன்ற நல்ல உண்மைகளே அவை. அவற்றை அறிந்தால் வேறுபாட்டு உணர்வுக்கு இடமில்லை. மேலும் அதனால்-அந்த அறிவின் தெளிவால் - உயர்ந்ததாகிய அடக்கம் நம்மை வந்து சாரும். அறிவும் அடக்கமும்பெறின் 'அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்' என்ற குறள்நெறிக் கேற்ப, தீயதற்கஞ்சி நல்லன செய்யத் தலைப்படும் நல்லுணர்வு