பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

சான்றோர் வாக்கு


100 சான்றோர் வாக்கு ஒருமைக் கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து' என்கிறார் வள்ளுவர் ஈண்டு எழுமை என்பதற்கு எழுகின்ற பிறவிகள் தோறும் எனப் பொருள் கொள்ளல் வேண்டும், எனவே மக்களாகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் கற்றவ ராக வேண்டும். கல்லாதாரைக் கற்றவராகச் செய்ய வேண்டும். இன்றே அத்தகைய ஆக்கப் பணியினைத் தொடங்குவோம். பயன் காண்போம்! எங்காளும் இன்பமே 'இன்பமே எந்நாளும் துன்பமில்லை. என்று அப்பர் போன்ற பெரியவர்கள் பாடிச் சென்றுள்ளார்கள். வாழப் பிறந்த மனிதன் என்றும் வாடாத வகையில் இன்பத்தினை நாடுவது இயற்கை, மனிதன் மட்டுமன்றி உயிருள்ள அனைத்துமே அந்த இன்ப வாழ்வினையே ஏற்க விழை கின்றன. ஆனால், அந்த இன்பத்தினைப் பெறப் பலர் வல வகையில் முயல்கின்றனர். ஒரு சிலர் தம் முயற்சியில் வெற்றி பெறுவர்; பலர் வீழ்ச்சியுறுவர். இன்ப வாழ்வும் பலருக்குப் பலவகையில் அமைகின்றது. அவரவர் மன நிலைக்கும் தகுதிக்கும் ஏற்ப இன்பம் எல்லையிடப்பெறும். ஆயினும் அத்தகுதி நிலையின் அடிப்படையில் அமைந்த இன்பத்தினைப் பெற மக்கள் பலப்பல வழிகளை மேற்கொள்ளுகின்றனர். சிலர் வழியல்லா வழி சென்று இன்பம் துய்க்கவும் முயல்வர். அது ஒருவேளை துன்பமாக மாறினும் மாறும். ஆயினும் சிறுபொழுதே பெறும் கண இன்பத்தைக் காணவே உலகில் பெரும்பாலோர் ஓடி உழல்கின்றனர். இன்பம் பெற்று மகிழும் காலத்தினைக் காட்டிலும், பின் நீண்டகாலம் துன்பத்தில் சுழலும் நிலையில் ஒரு சிலர் வாழ்வு அவலமாகக்